Homeசெய்திகள்தமிழ்நாடுபுள்ளம்பாடியில் விவசாயிகள் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்: கோரிக்கைகள் நிறைவேறாவிட்டால் சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில்...

புள்ளம்பாடியில் விவசாயிகள் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்: கோரிக்கைகள் நிறைவேறாவிட்டால் சென்னை – திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் குடியேறும் போராட்டம் – பி.ஆர். பாண்டியன் எச்சரிக்கை!

-

- Advertisement -

கூட்டுறவுப் பயிர்க் கடன்களை முழுமையாகத் தள்ளுபடி செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, திருச்சி மாவட்டம் புள்ளம்பாடி ஒன்றியம் மற்றும் நகர விவசாயிகள் கூட்டமைப்பு சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் விவசாயிகள் சங்கத் தலைவர்கள் பி.ஆர். பாண்டியன், அய்யாக்கண்ணு, சண்முகசுந்தரம், ராஜா சிதம்பரம், செல்வகுமார் உள்ளிட்ட ஆயிரக்கணக்கான விவசாயிகள் கலந்துகொண்டு கண்டனக் கோஷங்களை எழுப்பினர்.புள்ளம்பாடியில் விவசாயிகள் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்: கோரிக்கைகள் நிறைவேறாவிட்டால் சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் குடியேறும் போராட்டம் - பி.ஆர். பாண்டியன் எச்சரிக்கை!

முக்கியக் கோரிக்கைகள்
இப்போராட்டத்தில் வலியுறுத்தப்பட்ட முக்கிய அம்சங்கள் பின்வருமாறு:

we-r-hiring

கடன் தள்ளுபடி: தமிழக முதலமைச்சரின் தேர்தல் வாக்குறுதியின்படி, கூட்டுறவுச் சங்கங்களில் விவசாயிகள் பெற்ற அனைத்துப் பயிர்க் கடன்களையும் நிபந்தனையின்றி முழுமையாகத் தள்ளுபடி செய்ய வேண்டும். சிறு, குறு மற்றும் பெரிய விவசாயிகள் எனப் பாகுபாடின்றி அனைத்து விவசாயிகளுக்கும் இதன் பலன் கிடைக்கச் செய்ய வேண்டும்.

மேகதாட்டு அணைத் தடை: காவிரியின் குறுக்கே கர்நாடக அரசு மேகதாட்டுவில் புதிய அணை கட்டுவதைத் தடுத்து நிறுத்த மத்திய, மாநில அரசுகள் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பயிர் இழப்பீடு: காவேரி டெல்டா பகுதியில் நீர்வரத்து இன்றி விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளதால், பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும்.

ஆர்ப்பாட்டத்தைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய விவசாய சங்கத் தலைவர் பி.ஆர். பாண்டியன் கூறியதாவது:

“தேர்தல் அறிக்கையில் நெல் குவிண்டால் ஒன்றுக்கு ₹3,500-ம், கரும்பு டன் ஒன்றுக்கு ₹4,500-ம் வழங்கப்படும் என்று அறிவித்தீர்கள். இன்றைக்கு உற்பத்திச் செலவு பலமடங்கு உயர்ந்துள்ள நிலையில், தேர்தல் வாக்குறுதி அளித்தது போல குவிண்டால் ஒன்றுக்கு ₹3,500 விலையை அரசு நிர்ணயிக்க வேண்டும். கரும்புக்கும் டன் ஒன்றுக்கு ₹4,500 வழங்கிட வேண்டும்.

காவிரிப் பிரச்சினையைப் பொறுத்தவரை, கர்நாடகம் தமிழகத்திற்கு வழங்க வேண்டிய 40 டி.எம்.சி தண்ணீர் நிலுவையில் உள்ளதாகக் காவிரி மேலாண்மை ஆணையம் தெரிவித்துள்ளது. தற்போது உபரி நீரைத் திறந்துவிட்டு கணக்குக் காட்ட முயலும் கர்நாடகத்தின் சதியை ஏற்க முடியாது. உடனடியாக 40 டி.எம்.சி தண்ணீரையும் முழுமையாகப் பெற்றுத் தரப் போர்க்கால நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும், பயிரிட்ட காலத்தில் குவிண்டால் ₹3,200-க்கு விற்ற சோளம் தற்போது ₹1,800 ஆகக் குறைந்துள்ளதால், ஒழுங்குமுறை விற்பனைக் கூடம் மூலம் சோளத்தை குவிண்டாலுக்கு ₹3,200-க்கு குறையாமல் அரசு கொள்முதல் செய்ய வேண்டும்.

மேகதாட்டு அணைத் திட்டத்தைக் கைவிட்டு, பெருந்தலைவர் காமராஜரால் அடிக்கல் நாட்டப்பட்ட ‘ராசிமணல்’ பகுதியிலேயே அணை கட்ட தமிழக அரசு தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும். அரசுக்குத் தவறான வழிகாட்டுதலை வழங்கும் அதிகாரிகளின் செயல்பாடுகளால் உரிமைகள் பாதிக்கப்படுகின்றன.புள்ளம்பாடியில் விவசாயிகள் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்: கோரிக்கைகள் நிறைவேறாவிட்டால் சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் குடியேறும் போராட்டம் - பி.ஆர். பாண்டியன் எச்சரிக்கை!

எங்களது கோரிக்கைகள் குறித்து கடந்த 7-ஆம் தேதி அமைச்சர்களுடன் நடைபெற்ற பேச்சுவார்த்தையில், முதலமைச்சர் விரைந்து நல்லறிவிப்பு வெளியிடுவார் என உத்தரவாதம் அளிக்கப்பட்டுள்ளது. அதற்காகப் பொறுமையுடன் காத்திருக்கிறோம். கோரிக்கைகள் நிறைவேற்றப்படாத பட்சத்தில், அக்டோபர் முதல் வாரத்தில் லட்சக்கணக்கான டெல்டா விவசாயிகளைத் திரட்டி திருச்சி – சென்னை தேசிய நெடுஞ்சாலையில் குடியேறும் மாபெரும் போராட்டம் நடத்தப்படும்” என அவர் எச்சரித்தார்.

“தமிழகத்தின் தலையெழுத்தையே மாத்திடும்!”.. தொகுதி மறுவரையறைக்கு எதிராகச் சசிகாந்த் செந்தில் கொடுத்த வார்னிங்!

 

MUST READ