Homeசெய்திகள்தமிழ்நாடுமாதவரத்தில் கண்டெய்னர் முனைய சேமிப்பு கிடங்கில் 15 அடி நீளமுள்ள மலைப்பாம்பு - ஊழியர்கள் அலறியடித்து...

மாதவரத்தில் கண்டெய்னர் முனைய சேமிப்பு கிடங்கில் 15 அடி நீளமுள்ள மலைப்பாம்பு – ஊழியர்கள் அலறியடித்து ஓட்டம்!

-

- Advertisement -
kadalkanni

சென்னை மாதவரத்தில் கண்டெய்னர் முனைய சேமிப்பு கிடங்கில் 15 அடி நீளமுள்ள மலைப்பாம்பு இருந்ததால் இதனைக் கண்ட ஊழியர்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர்.

சென்னை மாதவரம் மூலக்கடையில் தனியாருக்கு சொந்தமான வெளிநாட்டுக்கு ஏற்றுமதி இறக்குமதி செய்யப்படும் கண்டெய்னர் முனையும் ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த முனையத்தில் வழக்கம் போல இரவு பகலாக தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டு வருவது வழக்கம். இந்த நிலையில் வழக்கம் போல தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது அதிகாலை 3 மணியளவில் சுமார் 15 அடி நீளம் உள்ள மலைப்பாம்பு ஒன்று கண்டெய்னர் பெட்டிகள் அடுக்கி வைக்கப்பட்டிருந்த பகுதியில் இருப்பதை ஊழியர் ஒருவர் கண்டார்.

இவர் உடனடியாக இது குறித்து மேலாளர் முரளியிடம் தகவல் தெரிவிக்கவே மேலாளர் மற்றும் சக ஊழியர்கள் அங்கு சென்று பார்த்தபோது கட்டுவிரியன் தோற்றத்தைப் போல கொண்ட ஒரு அரிய வகை மலைப்பாம்பு ஒன்று சுருண்ட படி கிடந்தது தகவல் அறிந்த செம்பியம் தீயணைப் புத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். ஒரு மணி நேர போராட்டத்திற்கு பின் 15 இடி நீளமுள்ள மலைப்பாம்பு பிடிபட்டது. இது தொடர்பாக கிண்டி வனத்துறை அலுவலகத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டு அவர்களிடம் பாம்பு ஒப்படைக்கப்பட்டது. இது தொடர்பாக வனத்துறை அதிகாரிகளிடம் கேட்டபோது இது வெளிநாடுகளில் அடர்ந்த காடுகளில் வாழும் மலைப்பாம்பு வகையாகும். வெளிநாடுகளில் இருந்து கொண்டுவரப்படும் கண்டெய்னர்களில் ஏறி இந்த பாம்பு வந்திருக்கும் .இதை அடர்ந்த வனப்பகுதியில் விட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் என வனத்துறையினர் தரப்பில் தெரிவித்தனர்

 

 

 

MUST READ