spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுமதிமுகவிற்கு பம்பர சின்னம் வழங்கப்படுமா? - நாளை விசாரணை

மதிமுகவிற்கு பம்பர சின்னம் வழங்கப்படுமா? – நாளை விசாரணை

-

- Advertisement -

 

we-r-hiring

மதிமுகவிற்கு பம்பர சின்னம் வழங்க வேண்டும் என மதிமுகப்பொதுச்செயலாளர் வைகோ உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கானது நாளை விசாரணைக்கு வருகிறது.

மக்களவை தேர்தல் அறிவிப்புகளை தேர்தல் ஆணையர் ராஜீவ்குமார் கடந்த 16 ஆம் தேதி வெளியிட்டார். அதன்படி மொத்தம் 7 கட்டங்களாக தேர்தல் நடைபெறவுள்ளது. தமிழகத்தில் ஏப்ரல் 19ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. மக்களவை தேர்தலில் 97 கோடி பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர். 1,82 கோடி முதல்முறை வாக்காளர்கள் இந்த தேர்தலில் வாக்களிக்க உள்ளனர். ஆண் வாக்காளர்கள் 49.7 பேரும், பெண் வாக்காளர்கள் 47.01 கோடி பேரும் உள்ளனர். 88.4 லட்சம் மாற்றுத்திறனாளி வாக்காளர்கள் உள்ளனர். மூன்றாம் பாலினத்தவர்கள் 48,044 பேர் உள்ளனர். தமிழகத்தை பொறுத்தவரையில், திமுக, அதிமுக, பாஜக, நாம் தமிழர் கட்சி என நான்கு முனை போட்டி நிலவுகிறது.

இந்த நிலையில் திமுகவுடன் கூட்டணியில் உள்ளது மதிமுக. இதில் திருச்சி நாடாளுமன்ற தொகுதியில் மதிமுக சார்பில் துரை வைகோ போட்டியிடுகிறார். இதனையடுத்து பம்பரம் சின்னத்தை தங்களுக்கு ஒதுக்கக்கோரி மதிமுக தேர்தல் ஆணையத்திடம் ஏற்கனவே கடிதம் அளித்திருந்தது. இந்த மனுவை உடனடியாக தேர்தல் ஆணையம் பரிசீலிக்க வேண்டும் என வைகோ வழக்கு தொடர்ந்திருந்தார். இந்நிலையில் இதனை அவசர வழக்காக விசாரிக்க சென்னை உயர்நீதிமன்ற அமர்வு ஒப்புதல் அளித்து நாளை விசாரணைக்கு ஏற்றுக் கொள்ளப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து மதிமுகவிற்கு நாளை பம்பர சின்னம் வழங்கப்படுமா என்ற எதிர்ப்பார்ப்பு எழுந்துள்ளது.

MUST READ