Homeசெய்திகள்தமிழ்நாடு'மக்களவைத் தேர்தல் 2024'- ம.தி.மு.க.வின் தேர்தல் அறிக்கை வெளியீடு!

‘மக்களவைத் தேர்தல் 2024’- ம.தி.மு.க.வின் தேர்தல் அறிக்கை வெளியீடு!

-

 

'மக்களவைத் தேர்தல் 2024'- ம.தி.மு.க.வின் தேர்தல் அறிக்கை வெளியீடு!

திருச்சியில் இன்று (ஏப்ரல் 06) காலை 11.00 மணிக்கு நடந்த நிகழ்ச்சியில் நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான ம.தி.மு.க.வின் தேர்தல் அறிக்கையை அக்கட்சியின் பொதுச்செயலாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான வைகோ வெளியிட்டார். ’24 உரிமை முழக்கம்’ என்ற பெயரில் மக்களவைத் தேர்தலுக்கான அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை – ஒரு சவரன் ரூ.53.000-த்தை நெருங்கியது!

மக்களவைத் தேர்தலுக்கான ம.தி.மு.க.வின் தேர்தல் அறிக்கையில் 74 வாக்குறுதிகள் இடம் பெற்றுள்ளன. அதன்படி, ஜி.எஸ்.டி. வரி நீக்கம், பெட்ரோல், டீசல் விலை குறைப்பு, சிறுபான்மையினர் நலன் காக்கப்படும். குடியுரிமைத் திருத்தச் சட்டத்தைத் திரும்பப் பெற வேண்டும், கூடங்குளம் அணு உலையை மூடுதல், தூக்குத் தண்டனை ஒழிப்பு உள்ளிட்ட வாக்குறுதிகளும் உள்ளன.

ஹைட்ரோ கார்பனுக்கு நிரந்தரத் தடை, கச்சத்தீவு மீட்பு, தேசிய நூலாக திருக்குறள் அறிவிக்கப்படும். மொழித் திணிப்பை எதிர்த்தல், மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை, நதிநீர் இணைப்பு, சேது கால்வாய் இணைக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளும் இடம்பெற்றுள்ளன.

அதேபோல், மக்களவைத் தேர்தலில் இந்தியா கூட்டணி வெற்றி பெற்றால் ராகுல் காந்தியை பிரதமராக தி.மு.க. முன்மொழிந்து, ம.தி.மு.க. வழிமொழிகிறது என்றும் வைகோ தெரிவித்துள்ளார்.

தி.மு.க. எம்.எல்.ஏ. புகழேந்தி காலமானார்!

மக்களவைத் தேர்தலில் தி.மு.க. கூட்டணியில் திருச்சி மக்களவைத் தொகுதியில் ம.தி.மு.க. சார்பில் துரை வைகோ போட்டியிடுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

MUST READ