Homeசெய்திகள்தமிழ்நாடு"முதலமைச்சரைச் சந்தித்தது மகிழ்ச்சியான தருணம்"- செஸ் வீரர் குகேஷ் பேட்டி!

“முதலமைச்சரைச் சந்தித்தது மகிழ்ச்சியான தருணம்”- செஸ் வீரர் குகேஷ் பேட்டி!

-

 

"முதலமைச்சரைச் சந்தித்தது மகிழ்ச்சியான தருணம்"- செஸ் வீரர் குகேஷ் பேட்டி!

கேண்டிடேட்ஸ் செஸ் தொடரில் வெற்றி பெற்ற தமிழகத்தைச் சேர்ந்த செஸ் வீரர் குகேஷ், தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து வாழ்த்துப் பெற்றார். சாதனை வீரர் குகேஷை பாராட்டிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவருக்கு ஊக்கத்தொகையாக ரூபாய் 75 லட்சத்திற்கான காசோலையையும், கேடயத்தையும் வழங்கினார்.

கோடை விடுமுறையையொட்டி, கன்னியாகுமரியில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்!

சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள முதலமைச்சர் இல்லத்தில் நடந்த சந்திப்பில், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

‘கோடைக்கால பயிற்சி முகாம் கட்டணம்’- எடப்பாடி பழனிசாமி கண்டனம்!

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த செஸ் வீரர் குகேஷ், “முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோரை சந்தித்தது மகிழ்ச்சி அளிக்கிறது. எனக்கு உறுதுணையாக இருப்பதாக முதலமைச்சர் கூறினார்” எனத் தெரிவித்துள்ளார்.

MUST READ