சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம், பெண் பயணிகளின் பாதுகாப்பிற்காக பிரத்யேக மகளிர் உதவி எண்ணை அறிமுகம் செய்துள்ளது.
சிகிச்சைக்கு பின் வீடு திரும்பினார் அஜித்!
பெண்களின் பாதுகாப்பை உறுதிச் செய்ய தனிப்பெட்டிகளுடன் கூடிய வசதிகள் மெட்ரோ ரயிலில் செய்யப்பட்டுள்ளன. இந்த நிலையில், மகளிர் தினத்தை முன்னிட்டு, பெண்களின் பாதுகாப்பை மேலும் வலுப்படுத்தும் வகையில், பிரத்யேக மகளிர் உதவி எண்ணை மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிமுகப்படுத்தியுள்ளது.
மெட்ரோ ரயிலில் பயணிக்கும் போது, ஏதேனும் இக்கட்டான சூழ்நிலை ஏற்படும் பட்சத்தில் அதை எதிர்க்கொள்ள பெண் பயணிகளுக்கு உதவும் நோக்கத்தில் இந்த சேவை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பிற பயணிகள் தரும் தொல்லைகளைத் தடுத்தல், பாதுகாப்பு மற்றும் சுகாதாரம் குறித்த அவசர தேவைகளின் போது, 155370 என்ற உதவி எண்ணை தொடர்புக் கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மீண்டும் இணையும் பிரபுதேவா – வடிவேலு காம்போ…ஷூட்டிங் எப்போது?
24 மணி நேரமும் பயன்படுத்தக் கூடிய இந்த சேவைக்கான உதவி எண் பிஎஸ்என்எல் நெட்வொர்க்கில் தற்போது செயல்படுத்தப்பட்டுள்ளது. மற்ற நெட்வொர்க்களுடனும் செயல்படுத்தும் பணிகள் நடைபெற்று வருவதாக சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் தெரிவித்துள்ளது.