விக்கிரவாண்டி அருகே தேசிய நெடுஞ்சாலையில் பால் வண்டி திடீரென தீப்பிடி எரிந்து சேதமடைந்தது.


விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகே சென்னை – திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சூர்யா தனியார் பொறியியல் கல்லூரி அருகே திருச்சியில் இருந்து பாலை இறக்கிவிட்டு சென்னை நோக்கி சென்ற குளிர்சாதன வசதிக்கு உடன் கூடிய பால் வண்டி விக்கிரவாண்டி அருகே சாலை நின்று கொண்டிருந்தது. அப்போது திடீரென குளிர்சாதன பெட்டி உள்ள பகுதியில் இருந்து தீப்பிடித்து எரிந்தது. உடனடியாக தீயணைப்பு தகவல் கொடுக்கப்பட்டு தீயணைப்பு வீரர்கள் தீயை அனைத்த போதிலும் வண்டி பெரும்பாலான பகுதி எரிந்து சேதம் அடைந்தது.
கோவர்த்தனா என்ற தனியார் பால் நிறுவனத்துக்கு சொந்தமான வாகனம் திருச்சியில் பாலை இறக்கிவிட்டு சென்னைக்கு காலியாக சென்றபோது சாலை ஓரம் நிறுத்திவிட்டு ஓட்டுநர் அருகே சென்றபோது இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.
