Homeசெய்திகள்தமிழ்நாடுமத்திய அரசின் புதிய கல்விக் கொள்கையை தமிழ்நாடு அரசு ஏற்காது - அமைச்சர் அன்பில் மகேஷ்!

மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கையை தமிழ்நாடு அரசு ஏற்காது – அமைச்சர் அன்பில் மகேஷ்!

-

அமைச்சரின் உடல்நிலை சீராக உள்ளதாக மருத்துவமனை அறிக்கை!

மத்திய அரசின் புதியக் கல்வி கொள்கையை தமிழக அரசு ஏற்காது என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.

திருச்சியில் செய்தியாளர்களை சந்தித்த பள்ளிகல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, “தமிழ்நாட்டுக்கு என மாநில கல்விக் கொள்கை வகுக்கப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். மாநில கல்விக்கொள்கையை வகுக்க கல்வித்துறை நிபுணர்கள் அடங்கிய குழு அமைக்கப்பட்டுள்ளது. புதிய தேசிய கல்விக் கொள்கை எதிர்க்க தமிழகத்துக்கு என்ன தேவை என்பதை அறிந்து மாநில கல்விக்கொள்கையை உருவாக்கி வருகிறோம்.

புதிய கல்விக் கொள்கையை ஏன் எதிர்க்கிறீர்கள் என மத்திய அரசு எங்களிடம் கேட்டுள்ளது. கல்வி மாநில பட்டியலுக்கு வரவேண்டும் என்பதுதான் தமிழ்நாடு அரசின் நோக்கம். கல்வி மாணவ செல்வங்களுக்கானது . அதில் அரசியல் செய்யக்கூடாது. அதனால் தான் புதிய கல்விக் கொள்கையை தமிழ்நாடு அரசு எதிர்கிறது. இதில் எந்த மாற்று கருத்தும் இல்லை. புதிய கல்விக் கொள்கை என்பது தமிழ்நாடு அரசு என்றைக்குமே ஏற்றுக்கொள்ளாத ஒன்று எனக் தெரிவித்துள்ளார்.

 

MUST READ