Homeசெய்திகள்தமிழ்நாடுஅமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் வழக்கு ஒத்திவைப்பு!

அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் வழக்கு ஒத்திவைப்பு!

-

 

அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் வழக்கு ஒத்திவைப்பு!
Photo: Minister Anitha Radhakrishnan

வருமானத்திற்கு அதிகமாக சொத்துச் சேர்த்ததாக, அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மீதான வழக்கு வரும் ஆகஸ்ட் 23- ஆம் தேதி விசாரணைக்காக ஒத்திவைக்கப்பட்டது.

திருவிளக்கு பூஜை…மேல்மலையனூர் அங்காளபரமேஸ்வரி திருகோவிலில் பௌர்ணமி நாளில் கோலாகலம்…

கடந்த 2001- ஆம் ஆண்டு முதல் 2006- ஆம் ஆண்டு வரை அமைச்சராக இருந்த போது, அனிதா ராதாகிருஷ்ணன் வருமானத்திற்கு அதிகமாக ரூபாய் 4 கோடியே 90 லட்சம் அளவுக்கு சொத்து சேர்த்ததாக லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப்பதிவு செய்தது.

இந்த வழக்கில் அனிதா ராதாகிருஷ்ணன், அவரது மனைவி, மகன்கள், உறவினர்கள் என ஏழு பேர் மீது கடந்த 2006- ஆம் ஆண்டு வழக்குப்பதிவுச் செய்யப்பட்டது. இந்த நிலையில், ரூபாய் 6.50 கோடி மதிப்பிலான 18 சொத்துகளையும் அமலாக்கத்துறை முடக்கியுள்ளது.

இந்த வழக்கு தொடர்பான விசாரணை தூத்துக்குடி மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. அதில், தங்களையும் மனுதாரராக இணைக்கக்கோரி, அமலாக்கத்துறை கடந்த ஏப்ரல் 18- ஆம் தேதி அன்று நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தது. இந்த வழக்கில் 80% விசாரணை நிறைவடைந்த நிலையில், அமலாக்கத்துறையை இந்த வழக்கில் சேர்க்க முடியாது என லஞ்ச ஒழிப்புத்துறை தெரிவித்துள்ளது.

ஓபிஎஸ் மீது வழக்கு தொடரும் அதிமுக

இந்த சூழலில், இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி செல்வம் விடுப்பு என்பதால், பொறுப்பு நீதிபதி சாமிநாதன் இந்த வழக்கினை வரும் ஆகஸ்ட் 23- ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.

MUST READ