spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுஓபிஎஸ் மீது வழக்கு தொடரும் அதிமுக

ஓபிஎஸ் மீது வழக்கு தொடரும் அதிமுக

-

- Advertisement -

ஓபிஎஸ் மீது வழக்கு தொடரும் அதிமுக

முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கட்சியின் பெயரையும், கொடியையும் பயன்படுத்த தடைக்கோரி அதிமுக வழக்கு தொடர முடிவு செய்துள்ளது.

OPS

கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் குற்றவாளிகளை விரைந்து கண்டுபிடிக்க திமுக அரசை வலியுறுத்தி அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் மற்றும் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் தமிழகம் முழுவதும் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அந்த போராட்டத்தில் அதிமுக கொடியை ஓ.பன்னீர்செல்வம் தவறாக பயன்படுத்தியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

we-r-hiring

ஆகவே கட்சியின் பெயரையும், கொடியையும் பயன்படுத்திய ஓ.பன்னீர்செல்வத்தின் மீது வழக்கு தொடர அதிமுக முடிவு செய்துள்ளது. ஓபிஎஸ் அதிமுக கொடியையும், பெயரையும் பயன்படுத்தக் கூடாது என அதிமுக தலைமை ஏற்கனவே டிஜிபி அலுவலகத்தில் மனு அளித்திருந்தது குறிப்பிடதக்கது. முன்னதாக ஓ.பன்னீர்செல்வத்தை அதிமுகவில் இருந்து நீக்கி அக்கட்சி பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டிருந்தார் என்பது குறிப்பிடதக்கது.

MUST READ