Homeசெய்திகள்தமிழ்நாடுஅமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனு தள்ளுபடி!

அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனு தள்ளுபடி!

-

- Advertisement -

 

'செந்தில் பாலாஜி ஜாமீன் மனு மீது செப்.20- ல் தீர்ப்பு வழங்கப்படும்' என அறிவிப்பு!
File Photo

சிறையில் உள்ள தமிழக அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனுவை சென்னை மாவட்ட முதன்மை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

we-r-hiring

அக்.9-ம் தேதி சட்டப்பேரவை கூடுகிறது!

சட்டவிரோதப் பணப்பரிமாற்றத் தடைச் சட்ட வழக்கில், கடந்த ஜூன் மாதம் 14- ஆம் தேதி அமலாக்கத்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ள தமிழக அமைச்சர் செந்தில் பாலாஜி, நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில், நீதிமன்றக் காவலில் சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

இந்த நிலையில், அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமீன் கோரி சென்னை மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் மனுவைத் தாக்கல் செய்திருந்தார். இதையடுத்து, ஜாமீன் கோரிய மனு மீதான விசாரணை நீதிபதி அல்லி முன்பு நடைபெற்றது.

அப்போது, அமலாக்கத்துறை சார்பில் மத்திய அரசின் வழக்கறிஞரும், அமைச்சர் செந்தில் பாலாஜி தரப்பில் பிரபல வழக்கறிஞர் கபில் சிபல் மற்றும் என்.ஆர்.இளங்கோ ஆகியோர் ஆஜராகி வாதங்களை முன் வைத்தனர். வாதங்கள் அனைத்தையும் பதிவுச் செய்துக் கொண்ட நீதிபதி அல்லி, ஜாமீன் மனு மீதான தீர்ப்பை இன்றைக்கு ஒத்திவைத்திருந்தார்.

சீமான் மீதான வழக்கு- காவல்துறைக்கு உயர்நீதிமன்ற நீதிபதி சரமாரி கேள்வி!

அதன் தொடர்ச்சியாக, இன்று (செப்.20) மாலை 04.00 மணிக்கு அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமீன் கோரிய மனுவை தள்ளுபடி செய்து சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி அல்லி உத்தரவிட்டுள்ளார்.

MUST READ