Homeசெய்திகள்தமிழ்நாடுசென்னைக்கு திரும்பினார் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி!

சென்னைக்கு திரும்பினார் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி!

-

 

அமைச்சரின் உடல்நிலை சீராக உள்ளதாக மருத்துவமனை அறிக்கை!
Photo: Minister Anbil Mahesh

உடல்நலக்குறைவுக் காரணமாக, பெங்களூருவில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.

செய்திகளை உடனுக்குடன் WhatsApp செயலியில் பெற

எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டுக்கு தி.மு.க. எம்.பி. திருச்சி சிவா பதில்!

கிருஷ்ணகிரியில் தமிழக பள்ளிக்கல்வித்துறை சார்பாக நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற அவருக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து, அமைச்சர் காரிமங்கலத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சைப் பெற்றார். பின்னர், மேல் சிகிச்சைக்காக, பெங்களூருவில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இந்த நிலையில், அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியின் உடல்நிலைத் தேறியதைத் தொடர்ந்து, மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். அதைத் தொடர்ந்து, சாலை மார்க்கமாக கார் மூலம் சென்னைக்கு திரும்பினார்.

அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் கைது!

கட்சியின் நிர்வாகிகள், சட்டமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்கள் என அனைவரும் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியைச் சந்தித்து நலம் விசாரித்து வருவதாக தகவல் கூறுகின்றன.

MUST READ