Homeசெய்திகள்தமிழ்நாடு24,000 கனஅடி நீரை திறந்துவிட கோரிக்கை வைக்க முடிவு - அமைச்சர் துரைமுருகன்

24,000 கனஅடி நீரை திறந்துவிட கோரிக்கை வைக்க முடிவு – அமைச்சர் துரைமுருகன்

-

24,000 கனஅடி நீரை திறந்துவிட கோரிக்கை வைக்க முடிவு – அமைச்சர் துரைமுருகன்

தமிழ்நாட்டுக்கு 24,000 கன அடி நீர் திறந்து விட வேண்டும் என இன்று நடக்கும் காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தில் வலியுறுத்தப்படும் என அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.

Image

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் துரைமுருகன், “விநாடிக்கு 5 ஆயிரம் கன அடி தண்ணீர் திறந்துவிட வேண்டும் என காவிரி ஒழுங்காற்று குழு கூறியது போதாது. காவிரியில் விநாடிக்கு 24,000 கன அடி நீர் திறந்து விட வேண்டும் என இன்று நடக்கும் காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தில் வலியுறுத்துவோம். காவிரி மேலாண்மை ஆணையத்தில் தமிழகத்தின் கோரிக்கை வலுவாக எடுத்துரைக்கப்படும். தமிழ்நாட்டின் கோரிக்கையை நீர்வளத்துறை செயலாளர் கூட்டத்தில் வலியுறுத்துவார். 45 டிஎம்சி நிலுவை தண்ணீரை உடனடியாக கர்நாடக அரசு திறந்துவிட ஆணையத்தில் வலியுறுத்தப்படும்” என்றார்.

அமைச்சரவை மாற்றமா?- ஆளுநரைச் சந்திக்கிறார் அமைச்சர் துரைமுருகன்!
File Photo

டெல்லியில் இன்று மதியம் 2.30 மணியளவில் காவிரி மேலாண்மை ஆணைய கூட்டம் நடைபெறுகிறது. இதில் தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா, புதுச்சேரியை சேர்ந்த நீர்வளத்துறை அதிகாரிகள் பங்கேற்கவுள்ளனர். காவிரியில் விநாடிக்கு 5 ஆயிரம் கன அடிநீர் திறக்க கர்நாடகாவிற்கு காவிரி ஒழுங்காற்று குழு பரிந்துரைத்த நிலையில், இதற்கு தமிழ்நாடு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. அடுத்த 10 நாட்களுக்கு விநாடிக்கு 24,000 கன அடிநீர் வீதம் திறக்க வேண்டும் என தமிழக அரசு வலியுறுத்திவருகிறது. ஆனால் கர்நாடக அரசு காவிரியில் கூடுதல் நீர் திறக்க முடியாது என திட்டவட்டமாக கூறிவருகிறது

MUST READ