spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுஅதிமுகவினர் மோடிக்கு ஜால்ரா போடுகிறார்கள்- செஞ்சி மஸ்தான்

அதிமுகவினர் மோடிக்கு ஜால்ரா போடுகிறார்கள்- செஞ்சி மஸ்தான்

-

- Advertisement -

அதிமுகவினர் மோடிக்கு ஜால்ரா போடுகிறார்கள்- செஞ்சி மஸ்தான்

விழுப்புரம் மாவட்டம் செஞ்சியில் செஞ்சி நகர திமுக சார்பாக ஆலோசனை கூட்டம் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் உரையாற்றுகையில், “முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமிக்கு நாவடக்கம் தேவை. மாமன்னன் படம் பார்த்தால் மக்களின் பசி தீர்ந்து விடுமா? என கேள்வி எழுப்புகிறார். எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களே மாமன்னன் படம் பார்த்தால் அறிவு பசி தீரும். ஒரு மனிதன் எப்படி வாழ வேண்டும்? ஒரு மனிதன் ஒரு மனிதனை எப்படி நேசிக்க வேண்டும்? ஒரு மனிதன் ஒரு மனிதனை உடன்பிறப்பாக சம அந்தஸ்தோடு அவரை கௌரவிக்க வேண்டும் என்பதை தான் அந்தப் படத்துடைய கதை அறிவு பசி தீரும், நீங்கள் என்ன பசியில் இருக்கிறீர்கள் என்று எனக்கு தெரியாது.

we-r-hiring

எதிர்காலத்தில் நீங்க என்ன பசியில் இருக்கிறீர்கள் என மக்கள் சரியான தீர்ப்பு உங்களுக்கு நாடாளுமன்ற தேர்தலில் கொடுப்பார்கள். நாடாளுமன்ற தேர்தலில் மகத்தான கூட்டணி தளபதி தலைமையில் மாபெரும் வெற்றி பெறும். இரண்டு ஆண்டு காலத்தில் நாங்கள் செய்த சாதனைகளை சொல்லி நாங்கள் தேர்தலில் வாக்கு கேட்போம். நீங்கள் கூட்டணி அமைத்துள்ள இந்திய பிரதமர் நரேந்திர மோடி அரசினுடைய சாதனைகளை சொல்ல முடியுமா? அதை தான் நாங்கள் எதிர்பார்க்கிறோம்.

gingee masthan | Latest Tamil News Updates, Videos, Photos | Vikatan

திமுக அரசு பெண்களுக்கு இலவசமாக பேருந்தில் பயணம் செய்ய உத்தரவிட்ட தலைவர் ஸ்டாலின், இந்தப் பெருமையை சொல்லி ஓட்டு கேட்போம். இதேபோல் மோடி ரயில் என்று சொல்ல வேண்டும், இந்தியா முழுவதும் போகின்ற ரயிலில் பெண்களுக்கு இலவசமாக டிக்கட் இல்லாமல் பயணம் செய்வதற்கு உத்தரவு போட வேண்டும் என்று கேட்பதற்கு தைரியம் இருக்கிறதா? அதிமுகவினர் மோடிக்கு ஜால்ரா போடுகிறார்கள்” என சாடினார்.

MUST READ