Homeசெய்திகள்தமிழ்நாடுஈவிகேஎஸ் இளங்கோவன் பிப்.3-ல் வேட்புமனு தாக்கல்: கே.என்.நேரு

ஈவிகேஎஸ் இளங்கோவன் பிப்.3-ல் வேட்புமனு தாக்கல்: கே.என்.நேரு

-

- Advertisement -

மக்களை நேரடியாக சந்தித்து தமிழ்நாடு முதல்வரின் 20 மாத ஆட்சியின் செயல்பாட்டை எடுத்து கூறி அதிகளவில் வாக்குகளை பெற்று எங்கள் கூட்டணி வேட்பாளர் வெற்றி பெறுவார் என திமுக கூட்டணி தேர்தல் பணி குழு பொறுப்பாளர் அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்தார்.

we-r-hiring

மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியில் ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி தேர்தல் பணிமனையில் கூட்டணி கட்சியினரின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் வேட்பாளர் ஈவிகேஎஸ். இளங்கோவன், அமைச்சர்கள் கே என் நேரு , முத்துசாமி , எ.வ.வேலு, ஆகியோர் கூட்டணி கட்சி நிர்வாகிகளிடம், தேர்தல் பணியை எப்படி செம்மையாக ஆற்றுவது என்பது குறித்தும் , ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதியை நான்கு மண்டலங்களாக பிரித்து எந்தெந்த அமைச்சர்கள் தலைமையில் தேர்தல் பணி ஆற்றப்படும் எனவும் விரிவாக எடுத்துரைத்தனர்.

தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி குறித்து தேர்தல் பணிக்குழு தலைவர் அமைச்சர் கே.என். நேரு, “
மிழ்நாடு முதலமைச்சர் செயல்படுத்தி வரும் திட்டங்களை கூறி மக்களை நேரடியாக சந்தித்து வாக்குகளை சேகரித்து வருகிறோம். வாக்கு சேகரிக்கச் செல்லும்போது மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது. பொதுக் கூட்டங்களை நடத்துவதை விட்டுவிட்டு , மக்களை நேரடியாக சந்தித்து வாக்கு சேகரிக்க உள்ளோம். மக்களின் வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டு வருவதால், உறுதியாக தங்கள் கூட்டணி வேட்பாளர் வெற்றி பெறுவார். பொதுக்கூட்டங்கள் என்று இல்லாமல் மக்களை நேரடியாக சந்தித்து வாக்கு சேகரிக்கின்ற பணிதான் சரியாக இருக்கும். எனவே பொதுக்கூட்டம் அதிகமாக இருக்காது. மக்களை சந்திக்கவேண்டும் என்பது தான் தேர்தல் பிரச்சார வியூகம், திமுக ஆட்சியின் சாதனையை எடுத்து கூறி வாக்கு கேட்பது முக்கியம்.

திமுக தலைவர் அவர்களின் பிரச்சார கூட்டம் இருக்கும். எங்கள் கூட்டணி வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் மூன்றாம் தேதி 12 மணிக்கு வேட்புமனு தாக்கல் செய்யப்படும். ஒன்றாம் தேதி அனைத்து கட்சி மாநில தலைவரும் கலந்து கொள்ளும் செயல் வீரர்கள் கூட்டம் நடத்தபோகிறோம். நாங்கள் செல்லும் பிரச்சாரத்தின் போது , மக்கள் உங்களுக்கு தான் வாக்கு அளிப்போம் என மகிழ்ச்சியாக தெரிவிக்கின்றனர்” எனக் கூறினார்.

MUST READ