Homeசெய்திகள்தமிழ்நாடுஓமந்தூரார் மருத்துவமனை சட்டப்பேரவையாக மாற்றப்படாது- அமைச்சர் மா.சு.

ஓமந்தூரார் மருத்துவமனை சட்டப்பேரவையாக மாற்றப்படாது- அமைச்சர் மா.சு.

-

ஓமந்தூரார் மருத்துவமனை சட்டப்பேரவையாக மாற்றப்படாது- அமைச்சர் மா.சு.

ஓமந்தூரார் பன்னோக்கு மருத்துவமனை தொடர்ந்து செயல்படும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் உறுதி அளித்துள்ளார்.

ஓமந்தூரார் அரசினர் தோட்ட வளாகத்தில் தலைமைச் செயலகம் கொண்டுவரப்படும் என தகவல்கள் பரவியது. இதையடுத்து சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன், “ஓமந்தூரார் பன்னோக்கு மருத்துவமனை ஒருபோதும் தலைமைச் செயலகமாக மாறாது. 500க்கு மேற்பட்ட முறை இந்த பதிலை கூறிவிட்டேன். ஓமந்தூரார் மருத்துவமனை பன்னோக்கு மருத்துவமனையாகவே இயங்கும். டெங்குவால் எந்த பாதிப்பும் இல்லை, இறப்பும் இல்லை. டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள் எடுத்து வருகிறோம்.

Image

சென்னை ஓமந்தூரார் மருத்துவமனை பன்னோக்கு மருத்துவமனையாகவே இயங்கும். மருத்துவ தேவை அதிகரித்துவரும் நிலையில் ஓமந்தூரார் மருத்துவமனையில் நோயாளிகளின் எண்ணிக்கையும் அதிகரித்துவருகிறது. எனவே எந்த சூழ்நிலையிலும் அந்த மருத்துவமனை சட்டப்பேரவையாக மாற்றப்படாது” என உறுதி அளித்தார்.

MUST READ