Homeசெய்திகள்தமிழ்நாடுசெவிலியர்களுக்கு கூடுதல் சம்பளத்துடன் மாற்றுப்பணி- அமைச்சர் மா.சு.

செவிலியர்களுக்கு கூடுதல் சம்பளத்துடன் மாற்றுப்பணி- அமைச்சர் மா.சு.

-

கொரோனா காலத்தில் ஒப்பந்த செவிலியர்களாக பணியமர்த்தப்பட்ட 2031 பேருக்கு கூடுதல் சம்பளத்துடன் மாற்றுப் பணி வழங்கப்படும் என மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார்.

Works underway to set up 24 district hospitals at ₹1,100 cr: TN Health  Minister - The Hindu BusinessLine
சென்னை தேனாம்பேட்டை, டி.எம்.எஸ். வளாகத்தில் உள்ள பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துத் துறை இயக்குனரகத்தில், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறையின் சார்பில் “நலம் 365” எனும் யூ-டியூப் சேனலை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார்.

நிகழ்ச்சியில் பேசிய, அமைச்சர் மா. சுப்பிரமணியன், சமூக வலைத்தளங்களில் ஒரு சிலர் அரசு அறிவிப்புகள் குறித்து பொய்யான தகவல்களை பரப்புவதை தொழிலாக வைத்துள்ளனர் என்றார். அதனை தடுக்கும் வகையில், மருத்துவத்துறை சார்பில் “நலம் 365” எனும் யூடியூப் சேனல் தொடங்கப்பட்டுள்ளதாகவும் இதில், மக்களின் உடல்நலம் குறித்த விழிப்புணர்வுகள் மேற்கொள்ளப்படும் என்றம் அவர் தெரிவித்தார்.

இந்த யூ-டியூப் சேனலில் மாதத்தில் ஒரு நாள் மக்களிடம் தொடர்பு கொண்டு அவர்களின் பிரச்சனைகளை கேட்டறியப்படுவதோடு மருத்துவத் துறை மீது பரப்பப்படும் வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கவும் இந்த சேனல் உதவியாக இருக்கும் என அமைச்சர் கூறினார். யோகா, மூச்சு பயிற்சி உள்ளிட்டவற்றை மக்களுக்கு கற்றுத் தரவும் உணவு பொருள்களின் அவசியம் மற்றும் அடிப்படை தேவைகளை நிவர்த்தி செய்யவும் இந்த யூ-டியூப் சேனல் உதவியாக இருக்கும் என்று மா.சு. குறிப்பிட்டார்.

எந்நேரமும் மக்கள் தங்கள் குறைகளை தெரிவிக்கலாம் என்றும் மக்களின் நல்வாழ்வை உறுதி செய்யும் வகையிலான இந்த சேனலில், விளம்பரம் ஏதும் வராது எனவும் அவர் விளக்கினார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் மா. சுப்பிரமணியன், வணிக நோக்கமின்றி மக்களின் சுகாதாரத்தை பேணி பாதுகாக்க YouTube சேனல் உருவாக்கப்பட்டுள்ளது என்றார். 24 மணிநேரமும் இயங்கும் இச்சேனலில், மகப்பேறு, சுகப்பிரசவம் குறித்த விளக்கம், சிறுவர்களுக்கு போடப்படும் தடுப்பூசியின் அவசியம் உள்ளிட்டவை குறித்து ஒளிபரப்பப்படும் என அவர் கூறினார்.

masu

கொரோனா காலத்தில், ஒப்பந்த அடிப்படையில் பணியமர்த்தப்பட்ட செவிலியர்களின் பணி நீட்டிப்பு ரத்து செய்யப்பட்டது தொடர்பாக பேசிய அமைச்சர், கடந்த அதிமுக ஆட்சியில் 2019-ஆம் ஆண்டு எம்.ஆர்.பி தேர்வாணையம் மூலம் விண்ணப்பித்த 2347 பேரில், 2323 பேரும் 2020-ஆம் ஆண்டில் விண்ணப்பித்த 5736 பேரில் 2366 பேரும் பணியில் சேர்ந்தனர் என்பதை சுட்டிக்காட்டினார்.
இந்த பணி நியமனத்தில், கொரோனா தொற்றை காரணம் காட்டி சான்றிதழ் பரிசோதனை இல்லாமலும் விகிதாச்சார அடிப்படை இன்றியும் அடிப்படை விதிமுறைகளை மீறி அதிமுக அரசால் பணியமர்த்தப்பட்டதாக மா.சு. தெரிவித்தார்.

பேரிடர் காலத்தில் விதிமுறை மீறி பணியில் இணைந்தவர்களை வேலைக்கு சேர்க்க வேண்டாம் என்று நீதிமன்றங்கள் உத்தரவு பிறப்பித்துள்ளதை குறிப்பிட்ட மா.சுப்பிரமணியன், அவர்களை பணியை விட்டு அனுப்பும் நோக்கம் அரசுக்கு இல்லை என தெளிவுபடுத்தினார்.

நான்கு மாதங்களாக அந்த தற்காலிக ஊழியர்களுக்கு ஊதியம் வழங்குவதில் சிக்கல் எழுந்ததாகவும் அதனால், பணி நீட்டிப்பு செய்ய இயலாத சூழல் ஏற்பட்டதாகவும் அமைச்சர் கூறினார். இருப்பினும், கொரோனா தொற்று காலத்தில் பணியாற்றியவர்களின் நலன் கருதி, தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனையோடு, பொது சுகாதார துறையில் காலியாக உள்ள 2200 செவிலியர் பணியிடங்கள் மற்றும் மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தில் காலியாக உள்ள 270 இடைநிலை சுகாதார செவிலியர் பணியிடங்கள் ஆகியவற்றில், அந்த 2301 ஒப்பந்த செவிலியர்களுக்கும் முன்னுரிமை வழங்கப்படும் என மா.சு. உறுதியளித்தார்.

கொரோனா காலத்தில் பணியாற்றிய செவிலியர்கள் 14 ஆயிரம் ரூபாய் ஊதியம் வாங்கி இருந்த நிலையில், மாற்று பணியிடம் காரணமாக 18 ஆயிரம் சம்பளம் வழங்கப்படும்.ன என்றும் அவர் அறிவித்தார். ஆனால், அவர்களுக்கு பணி நிரந்தரம் என்பது சாத்தியமில்லை என்றும் இதனை கொரோனா கால ஒப்பந்த செவிலியர்கள் உணரவேண்டும் என்றும் அமைச்சர் மா.சுப்பிரமணியன் கேட்டுக் கொண்டார்.

மற்ற அரசியல் கட்சி தலைவர்கள் மனிதாபிமான அடிப்படையில் கருத்து தெரிவித்து வரும் போது, எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி முழு பூசணிக்காயை சோற்றில் மறைக்க பார்க்கிறார் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் குற்றஞ்சாட்டினார்.

தொடர்ந்து பேசிய அமைச்சர், சீனாவில் இருந்து தமிழகம் வந்த 2 பேர் உட்பட்ட வெளிநாட்டில் இருந்து வந்த மொத்தம் 13 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானதாக தெரிவித்தார். அவர்களது மாதிரிகளை மரபணு பகுப்பாய்வு பரிசோதனை செய்ததில், 6 பேருக்கும் பி.எஃப்.7 என்ற ஒமைக்கிரான் வைரஸ் பாதிப்பு இல்லை என்றார். கடந்த டிசம்பர் மாதத்தில் 93 பேரின் மாதிரிகள் மரபணு பகுப்பாய்வு செய்யப்பட்டதில் 91 பேருக்கு ஒமைக்கிரான் வகை வைரஸ் பாதிப்பும் 2 பேருக்கு டெல்டா வகை வைரஸ் பாதிப்பும் கண்டறியப்பட்டுள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கினார்.

MUST READ