Homeசெய்திகள்தமிழ்நாடு"அமைச்சர் செந்தில் பாலாஜி இதயத்தில் 90% அடைப்பு"- மருத்துவ அறிக்கையில் தகவல்!

“அமைச்சர் செந்தில் பாலாஜி இதயத்தில் 90% அடைப்பு”- மருத்துவ அறிக்கையில் தகவல்!

-

 

Photo: ANI

17 மணி நேர சோதனைக்கு பிறகு தமிழக மின்சாரம் மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜியை மத்திய அமலாக்கத்துறை அதிகாரிகள், நள்ளிரவில் சென்னையில் கைது செய்து விசாரணைக்காக, காரில் அழைத்துச் சென்றனர். அப்போது, அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, சென்னை ஓமந்தூரார் பன்னோக்கு அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அமைச்சர் செந்தில் பாலாஜி அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.

“அமைச்சர் செந்தில் பாலாஜியின் உறவினர்களின் கடன் அடைக்கப்பட்டது எப்படி?”- அமலாக்கத்துறை வெளியிட்டுள்ள தகவல்!

அவருக்கு பைபாஸ் அறுவைச் சிகிச்சை செய்ய ஓமந்தூரார் மருத்துவமனை மருத்துவர்கள் பரிந்துரைத்த நிலையில், இஎஸ்ஐ மருத்துவர்களும் பரிந்துரைச் செய்துள்ளனர். இதனிடையே, அமைச்சர் செந்தில் பாலாஜி சிகிச்சைப் பெற்று வரும் ஓமந்தூரார் பன்னோக்கு அரசு மருத்துவமனைக்கு நேரில் சென்ற சென்னை மாவட்ட நீதிமன்ற முதன்மை அமர்வு நீதிபதி அல்லி, விசாரணை நடத்தி, அமைச்சரை வரும் ஜூன் 28- ஆம் தேதி வரை 15 நாட்கள் நீதிமன்றக் காவலில் வைக்க உத்தரவிட்டிருந்தார்.

இந்த நிலையில், அமைச்சர் செந்தில் பாலாஜியின் உடல்நிலைக் குறித்து ஓமந்தூரார் பன்னோக்கு அரசு மருத்துவமனை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு இதயத்தில் 90% அடைப்பு ஏற்பட்டுள்ளது. அவரின் ரத்த அழுத்தம், இதயத்துடிப்பு சீராக உள்ளது. அமைச்சருக்கு ரத்த நாளங்களில் வலது புறத்தில் 90% அடைப்பும், இடது புறத்தில் 80% அடைப்பும் உள்ளது. மருத்துவர்கள் பரிந்துரைத்த மருந்துகளும், உணவுகளும் செந்தில் பாலாஜிக்கு வழங்கப்படுகிறது. அமைச்சர் செந்தில் பாலாஜி சுயநினைவுடன் இருக்கிறார். இதயத்தில் மூன்று இடங்களில் அடைப்பு இருப்பதால், பைபாஸ் அறுவை சிகிச்சை செய்ய பரிந்துரைக்கப்பட்டுள்ளது” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

“செந்தில் பாலாஜி மீது நடவடிக்கைக் கோரியவர் மு.க.ஸ்டாலின்”- அண்ணாமலை பேட்டி!

அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அறுவைச் சிகிச்சை செய்ய அனுமதிக் கோரி அவரது குடும்பத்தினர் சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ள நிலையில், அதன் மீது இன்று (ஜூன் 15) தீர்ப்பளிக்கப்படும் என்று நீதிபதி அல்லி அறிவித்துள்ளார்.

நீதிமன்றம் அனுமதி கொடுத்தால் காவேரி மருத்துவமனை (அல்லது ) அப்பல்லோ மருத்துவமனையில் அமைச்சர் செந்தில் பாலாஜியை அனுமதித்து பைபாஸ் அறுவை சிகிச்சையைச் செய்ய அவரது குடும்பத்தினர் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஒரேவேளை அனுமதிக் கிடைக்காத பட்சத்தில், ஓமந்தூரார் மருத்துவமனையிலே அமைச்சருக்கு அறுவைச் செய்யப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

MUST READ