100 இடங்களில் இ-வாகனங்களுக்கு சார்ஜிங் பாய்ண்ட்
தமிழ்நாடு மின்வாரியம் சார்பில் 100 இடங்களில் விரைவில் மின்சார வாகனங்களுக்கான சார்ஜிங் பாய்ண்ட் அமைக்கப்படவுள்ளதாக அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.

கோடை காலம் முடிந்ததும் சார்ஜிங் பாய்ண்ட் அமைக்கும் பணிகள் தொடங்கப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பார்க்கிங் உள்ளிட்ட நவீன வசதிகளுடன் மின்சார வாகனங்களுக்கான சார்ஜிங் பாய்ண்ட் அமைக்கப்பட உள்ளது. பயன்பாடு மற்றும் வரவேற்பைத் தொடர்ந்து இது மேலும் விரிவுபடுத்தப்பட உள்ளதாகவும் அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார். இதற்கு ஒழுங்குமுறை ஆணையத்தின் ஒப்புதல் விரைவில் கிடைக்கவுள்ளது. திருத்திய மின் கட்டண உயர்வு அடுத்த மாதம் முதல் நடைமுறைக்கு வர வாய்ப்புள்ளதாக அமைச்சர் செந்தில் பாலாஜி தகவல் கூறினார்.

தாழ்வாக செல்லும் மின்வட கம்பிகள் மாற்றப்பட்டு வருகிறதாகவும், அதிகாரிகளை கண்காணிக்க சிறப்பு குழு அமைக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார். வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள ஒரு லட்சத்து 45 மின்கம்பங்கள் தயாராக உள்ளதாகவும் அவர் கூறினார்.