

உலக பட்டினி குறியீடு பட்டியலை ஏற்க மறுப்பு தெரிவித்து, கருத்துத் தெரிவித்துள்ள மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானியை தி.மு.க. எம்.பி. கனிமொழி விமர்சித்துள்ளார்.
அக்., 26-ம் தேதி ஓடிடி தளத்தில் வெளியாகும் சந்திரமுகி 2
தெலங்கானா மாநிலத்தின் தலைநகர் ஹைதராபாத்தில் நடைபெற்ற தொழில் கூட்டமைப்பின் மாநாட்டில் கலந்து கொண்டு பேசிய மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி, இந்தியாவின் உண்மையான நிலவரத்தை அறியாமல் உலகப் பட்டினி குறியீடு பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. 140 கோடி மக்களில் மூன்றாயிரம் பேரிடம் மட்டும் கருத்துப் பெற்று வெளியிட்ட பட்டியலின் மூலம் எப்படி உண்மையான நிலவரத்தை நம்மால் அறிய முடியும் என கேள்வி எழுப்பினார்.
இந்த நிலையில், மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானியை விமர்சித்து தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் கருத்துத் தெரிவித்துள்ள கனிமொழி எம்.பி.,உலக பட்டினி குறியீடு பட்டியல் தயார் செய்யப்பட்ட முறையை அறிந்துக் கொள்ளாமல், மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை அமைச்சர் அதை விமர்சித்துப் பேசியிருப்பது வேதனையளிப்பதாகக் குறிப்பிட்டுள்ளார்.
லியோ படத்திலிருந்து புதிய பாடல் ரிலீஸ்
ஊட்டச்சத்துக் குறைபாடு, உணவுப் பகிர்வு குழந்தைகள் மரணம் ஆகிய முக்கிய பிரச்சனைகளில் மத்திய பா.ஜ.க. அரசின் தகுதி அமைச்சரின் இந்த பேச்சின் மூலம் தெரிவதாக விமர்சித்துள்ளார்.
