Homeசெய்திகள்தமிழ்நாடுமக்கள் வரிப்பணம் வீணாகக்கூடாது- மு.க.ஸ்டாலின்

மக்கள் வரிப்பணம் வீணாகக்கூடாது- மு.க.ஸ்டாலின்

-

- Advertisement -

வேலூரில் 4 மாவட்ட கள ஆய்வு கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார்.

அப்போது பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “பட்டா மாறுதல் உள்ளிட்டவற்றுக்கு மக்கள் அலைக்கழிக்கப்படுவதை மாவட்ட ஆட்சியர்கள் தடுக்க வேண்டும். அறிவிக்கப்பட்ட திட்டங்களில் பெரும்பாலான திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. பல வழிமுறைகளில் திட்டங்கள் பிறந்தாலும் அதனை முழுமையாக மக்களிடம் சேர்க்கும் பொறுப்பு அரசு அலுவலர்களுக்கே உள்ளது. அரசு துறைகள் ஒன்றோடு ஒன்று இணைந்து செயல்பட்டால் திட்டப்பணிகள் விரைவாக முடிவு பெறும். அரசு நிதி மட்டுமின்றி கடன் வாங்கியும் திட்டங்களுக்காக செலவிடுகிறோம்.

we-r-hiring

மக்கள் வரிப்பணம் வீணாகாமல் ஒதுக்கப்படும் நிதியைவிட குறைந்த செலவில் திட்டங்களை முடிக்க வேண்டும். ஒவ்வொரு ஆண்டுக்கான பணிகளை அந்தந்த ஆண்டிலேயே முடிக்க வேண்டும். குறிப்பிட்ட காலத்திற்குள் திட்டங்களை முடிக்க வேண்டும். இன்றைய ஆய்வில் சில துறைகளில் 2021-2022 ஆம் ஆண்டு பணிகள் முடிக்கப்படாமல் இருந்தது தெரியவந்துள்ளது. தொடர்ந்து ஆட்சியர் உள்ளிட்ட அதிகாரிகளும் கள ஆய்வில் ஈடுபட வேண்டும். பணிகளை ஆட்சியர்கள் கவனமாக கண்காணித்து செயல்படுத்தினால் அனைத்து திட்டங்களும் மக்களை சென்றடையும்.

Home

அடுத்த மாதம் தாக்கல் செய்யப்படவுள்ள பட்ஜெட்டில் புதிய திட்டங்கள் அறிவிக்கப்படவுள்ளன. பட்ஜெட்டுக்கு முன்பாகவே தற்போதுள்ள திட்டங்கள் அனைத்தையும் செயல்படுத்த வேண்டும்” என அறிவுறுத்தினார்.

MUST READ