Homeசெய்திகள்தமிழ்நாடுதி.மு.க MP ஜெகத்ரட்சகன் சொத்துகள் பறிமுதல் வழக்கு - உச்சநீதிமன்றம் ரத்து

தி.மு.க MP ஜெகத்ரட்சகன் சொத்துகள் பறிமுதல் வழக்கு – உச்சநீதிமன்றம் ரத்து

-

- Advertisement -

தி.மு.க MP ஜெகத்ரட்சகனுடன் தொடர்புடைய நிறுவனத்தின் சொத்துகளை அந்நியச் செலாவணி மேலாண்மைச் சட்டத்தின் கீழ் பறிமுதல் செய்த உத்தரவை உச்சநீதிமன்றம் ரத்து செய்தது.தி.மு.க MP ஜெகத்ரட்சகன் சொத்துகள் பறிமுதல் வழக்கு - உச்சநீதிமன்றம் ரத்துகடந்த 2020-ம் ஆண்டு சிங்கப்பூர் உள்ளிட்ட வெளிநாடுகளில் உள்ள நிறுவனங்கள் மூலம் சட்ட விரோத பணப்பரிமாற்றத்தில் ஜெகத்ரட்சகன் ஈடுபட்டதாக அவர் மீது குற்றம்சாட்டப்பட்டது. இதனையடுத்து, ஜெகத்ரட்சகன் மற்றும் அவரது மகன், மகள்  தொடர்புடைய இடங்களில் அமலாக்கத் துறை சோதனை நடத்தி ஆவணங்களை கைப்பற்றியது.

மேலும், வெளிநாடுகளில் சட்டவிரோதமாக முதலீடுகளை செய்ததாகவும், குறிப்பாக சிங்கப்பூரில் போலி நிறுவனங்கள் மூலம் 42 கோடியும், இலங்கை நிறுவனத்தில் 9 கோடி முதலீடு செய்து சட்டவிரோத பணப் பரிவர்த்தனையில் ஈடுபட்டதாக அமலக்கத்துறை குற்றம்சாட்டியது. இது தொடர்பான வழக்கில் ஜெகத்ரட்சகன் நேரில் ஆஜராக நோட்டீஸ் அனுப்பப்பட்ட நிலையில், அவரது வழக்கறிஞர்கள் ஆஜராகி விளக்கம் அளித்தனர்.

we-r-hiring

ஆனால், நீதிமன்றம் ஜெகத்ரட்சகன்  சொத்துகளை பறிமுதல் செய்ய உத்தரவிட்டது. அந்த வகையில், சட்டவிரோத பணப் பரிவர்த்தனையில் குற்றம்சாட்டப்பட்ட ஒவ்வொரு விதி மீறல்களுக்கும் அபராதம் விதிக்கப்பட்டது, அதன்படி 908 கோடி ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டதோடு, அக்கார்ட் டிஸ்டில்லரீஸ் மற்றும் ப்ரீவரிஸ்  நிறுவனம் மற்றும் அதன் இயக்குநர்களான தி.மு.க எம்.பி ஜெகத்ரட்சகன், அவரது மகன் சுந்தீப் ஆனந்த் மற்றும் மகள் ஆகியோரின் 89.19 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துகளை அமலக்கத்துறை பறிமுதல் செய்தது.

மேலும் சட்டவிரோத பண பரிவர்த்தனை விவகாரத்தில் நேரில் ஆஜராக நோட்டீஸ் பிறப்பித்தும் அமிலக்கத்துறை உத்தரவை பிறப்பித்திருந்தது. இந்த நடவடிக்கைகளை எதிர்த்து உயர்நீதிமன்ற டிவிசன் அமர்வில் ஜெகத்ரட்சகன் தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டிருந்தது. ஆனால் சென்னை உயர்நீதிமன்ற டிவிசன் அமர்வு அமலாக்கத் துறையின் நடவடிக்கைக்கு தடைவிதிக்க மறுப்பு தெரிவித்திருந்தது.

இதனை எதிர்த்து ஜெகத்ரட்சகன் உள்ளிட்டோர் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. அந்த மேல்முறையீட்டு மனு நீதிபதிகள் விக்ரம் நாத் மற்றும் சந்திப் மேத்தா அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், இந்த பறிமுதல் நடவடிக்கை சட்டப்படி செல்லத்தக்கது அல்ல என்றும், அடிப்படை ஆதாரமற்றது தெரிவித்தனர்.

மேலும், ஏற்கனவே இந்த நிறுவனத்தின் சொத்துக்களை பறிமுதல் செய்ய FEMA அதிகார அமைப்பு மறுத்திருந்த நிலையில், அதை கவனத்தில் கொள்ளாமலும், முறையான சட்ட நடைமுறைகளைப் பின்பற்றாமல் தன்னிச்சையாக இந்த சொத்து பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக  அமலக்கத்துறையின் நடவடிக்கையை நீதிபதிகள் சுட்டிக்காட்டனர்.

இதனையடுத்து, அக்கார்ட் டிஸ்டில்லரீஸ் மற்றும் ப்ரீவரிஸ்  நிறுவனம் மற்றும் அதன் இயக்குநர்களான தி.மு.க எம்.பி. ஜெகத்ரட்சகன், அவரது மகன் சுந்தீப் ஆனந்த் மற்றும் மகள் ஆகியோரின் சொத்துக்களைப் பறிமுதல் செய்த உத்தரவை ரத்து செய்த நீதிபதிகள், இந்த விவகாரத்தில் உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள மேல்முறையீட்டு மனுவை இரண்டு மாதங்களுக்குள் விசாரித்து முடிக்க வேண்டும் என்றும், அதுவரை பழைய உத்தரவுகள் எதையும் கருத்தில் கொள்ளாமல் புதிய விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

தி.மு.க நிர்வாகிகளுடன் முதல்வர் காணொலி மூலம் கலந்துரையாடல்

MUST READ