அனைத்து தொகுதி தி.மு.க. நிர்வாகிகளுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் காணொலி மூலம் கலந்துரையாடல் கூட்டம் தொடங்கியது.
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மார்ச் 31-ம் தேதி தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கினார். திருவாரூர், திருச்சி, கரூர், ஈரோடு, கோவை ஆகிய மாவட்டங்களில் கடந்த 3 நாட்களாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து தீவிர பிரச்சாரம் மேற்கொண்டார்.
இந்நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தமிழ்நாடு தேர்தலை ஒட்டி அனைத்து தொகுதிகளிலும் உள்ள திமுக நிர்வாகிகளுடன் சென்னை ஆழ்வார்பேட்டை செனடாப் சாலையில் அமைந்துள்ள இல்லத்தில் இருந்து காணொலி மூலம் கலந்துரையாடி வருகிறார்.

இக்கூட்டத்தில் மாவட்டச் செயலாளர்கள், திமுக வேட்பாளர்கள், பகுதி, நகரம், ஒன்றியம் வட்டக் கழகச் செயலாளர்கள் மற்றும் தொகுதிக்கான கேட்பாளர்கள் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும் என திமுக தலைமைக்கழகம் கேட்டுக்கொண்டுள்ளது.
சேப்பாக்கம், திருவல்லிக்கேணியில் பகுதியில் தீவிர வாக்கு சேகரிப்பில் உதயநிதி ஸ்டாலின்
