Homeசெய்திகள்தமிழ்நாடுவிஜயின் மொய்ப்பாளரான முன்னாள் டிஎஸ்பிக்கு பிணையில்லா பிடி ஆணை – நீதிபதி அதிரடி

விஜயின் மொய்ப்பாளரான முன்னாள் டிஎஸ்பிக்கு பிணையில்லா பிடி ஆணை – நீதிபதி அதிரடி

-

- Advertisement -

தவெக தலைவர் விஜயின் மெய்காப்பாளரும், முன்னாள் டிஎஸ்பியுமான சபிபுல்லாவிற்கு  திண்டுக்கல் கூடுதல் அமர்வு நீதிமன்ற நீதிபதி பிணையில்லா பிடி ஆணை பிறப்பித்துள்ளாா்.

விஜயின் மொய்ப்பாளரான முன்னாள் டிஎஸ்பிக்கு பிணையில்லா பிடி ஆணை – நீதிபதி அதிரடி

we-r-hiring

திண்டுக்கல் முத்தழகு பட்டியில் கடந்த 2018ம் ஆண்டு சக்திவேல் என்பவர்  வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இந்த வழக்கு தொடர்பாக அப்போதைய தெற்கு காவல் நிலைய ஆய்வாளர் சபிபுல்லா வழக்கு பதிவு செய்து குற்றவாளிகளான அலெக்ஸ்ராஜ் உள்ளிட்ட 11 பேரை கைது செய்து பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

இது தொடர்பான வழக்கு திண்டுக்கல் கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் கடந்த 2018 ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் ஆய்வாளராக பணியாற்றி வந்த சபிபுல்லா  பதவி உயர்வு பெற்று டிஎஸ்பியாக மாற்றலாகி சென்றார். இந்நிலையில் விருப்ப ஓய்வு வேண்டுமென காவல்துறையில் விண்ணப்பித்து முறைப்படி பணி ஓய்வு பெற்று சபிபுல்லா  சென்றுள்ளார்.

இவர், தற்போது தமிழக வெற்றி கழகத்தின் நிர்வாகியாகவும், தலைவர் விஜயின் மெய்க்காப்பாளராகவும் இருந்து வருகிறார்.  சக்திவேல் கொலை வழக்கு தொடர்பாக நேரில் ஆஜராக வேண்டும் என நீதிமன்றம் பலமுறை உத்தரவிட்டும் சபிபுல்லா நேரில் ஆஜராகாமல் தவிர்த்து வந்துள்ளார்.

இந்த வழக்கு உரிய விசாரணை இன்றி நீண்ட காலமாக நிலுவையில் இருந்து வந்துள்ளது. இதனால், நீதிமன்றத்திற்கு ஆஜராகாமல் காலம் கடத்தி வந்த சபிபுல்லாவிற்கு திண்டுக்கல் கூடுதல் அமர்வு நீதிமன்ற நீதிபதி ராஜகோபால் பிணையில் வர முடியாத நீதிமன்ற பிடிஆணை பிறப்பித்து உத்தரவிட்டார். இச்சம்பவம் திண்டுக்கல் நீதிமன்றத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

த.வெ.க தலைவர் விஜய் திருச்சி கிழக்கில் வேட்புமனுத் தாக்கல்; பிரம்மாண்ட ரோடு ஷோ (Roadshow)

MUST READ