திமுகவிடம் அரூர் கேட்டால் அறக்கோணம் தருகிறார்கள், பல்லாவரத்திற்கு பண்ருட்டி தந்தார்கள் என தொல்.திருமாவளவன் கூறியுள்ளாா்.
இதுகுறித்து விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவா் தொல்.திருமாவளவன், “ஆளூர் ஷா நவாஸ் நாகப்பட்டினம் தொகுதியில் போட்டியிட விரும்பவில்லை என்றும் அவர் ராயபுரத்தை போட்டியிட விரும்புகிறார் என்ற தகவல் எனக்கு கிடைத்ததும் ராயபுரத்தை தேர்வு செய்திருந்தேன். மூன்று சட்டமன்ற உறுப்பினர்களுக்கு வாய்ப்பு வழங்காதது எந்த உள்நோக்கமும் இல்லை. நான் யாரையும் வெறுக்கவில்லை தவிர்க்கவில்லை பலி வாங்க வேண்டும் என்று எண்ணவில்லை. ஒருமுறை கூட வாய்ப்பு கிடைக்காதவர்கள் பல பேர் இருக்கின்றனர். மூன்று பேருக்கு வழங்கவில்லை. ஆனால், புதிய மூன்று பேருக்கு வழங்கி இருக்கிறோம்.
இரண்டு பொது தொகுதி 2 புதிய நபர்கள். இவர்கள் யாரும் திடீரென கட்சிக்கு வந்தவர்கள் இல்லை. ஆளூர் ஷா நவாஸ் போல அப்துல் ரகுமான் பேச முடியுமா என்ற கேள்வி வரலாம், இருந்தாலும் ஆளுநர் ஷா நவாஸ் சட்டமன்றத்தில் பேசினாலும் சரி வெளியில் பேசினாலும் சரி நம் கட்சிக்கு நன்மை சேர்க்கும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. நாகப்பட்டினமாக இருந்திருந்தால் ஆளூர் ஷா நவாஸ் தான் இருந்திருப்பார். நாகப்பட்டினம் ஜவாஹிருல்லாக்கு வழங்கிவிட்டார்கள் ஏனென்று விசாரித்தபோது ஷாநவாஸ் அவர்களே மீண்டும் அந்த தொகுதியில் போட்டியிட விரும்பவில்லை என்று சொன்னார்கள். ராயபுரத்தை தான் ஷா நவாஸ் விரும்புகிறார் என்று தகவல் கிடைத்தது அதனால் ராயபுரம் தொகுதியை நான் தேர்வு செய்து விட்டேன் இருந்தேன்.

திருப்போரும் அதே போல தான் தேர்வு செய்தேன். பல்லாவரம் தேமுதிகவிற்கு போய்விட்டது பல்லாவரம் கிடைத்திருந்தால் அதுவும் ஷா நவாஸ்க்கு தான் வழங்கியிருப்பேன். தொகுதி தேர்வு செய்வதில் காலதாமதம் இருந்தது விரைந்து முடிக்க வேண்டிய சூழலும் இருந்தது. அவசரகதியில் நமக்கு தொகுதியை தரவே வேண்டாம் என்று சொன்னால் கள்ளக்குறிச்சி தந்தார்கள்.
பல்லாவரம் கேட்டதற்கு பண்ருட்டியை தந்தார்கள். கள்ளக்குறிச்சியை இது போல தான் தந்தார்கள். இஸ்லாமியர் ஒருவரை நிறுத்த வேண்டும் என எங்கள் எண்ணம் இருக்கிறது ஷா நவாஸ்யை தான் நிறுத்தி இருப்போம். ஆனால் அப்துல் ரகுமானும் என்னிடம் தொடர்ந்து கேட்டதால் அப்துல் ரகுமானை நிறுத்தி இருக்கிறோம். ஷாநவாசை தவிர்க்க வேண்டும் என்ற எண்ணத்தில் எடுக்கப்பட்ட முடிவு இல்லை. அப்துல் ரகுமானுக்கு வாய்ப்பு வழங்கலாம் என்ற முடிவு தான் இதில் எந்த உள்நோக்கமும் கிடையாது வேட்பாளர் தேர்வில் எந்த உள்நோக்கமும் இல்லை. ஷாநவாஸ் பாலாஜி பனையூர் பாபு ஆகியோர்க்கு தங்களுடைய வருத்தங்களை வேதனைகளை என்னிடத்தில் நேரிலே வந்து வெளிப்படுத்தலாம். தொடர்ந்து கட்சியில் நல்ல பொறுப்புகளை ஏற்று சிறப்பாக பணியாற்றுவார்கள் என்று நம்புகிறேன்“ என விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவா் தொல்.திருமாவளவன் கூறியுள்ளாா்.
எனது காரை வழிமறித்த நிகழ்வு ‘தற்செயலாக நடந்தது அல்ல; திட்டமிட்டசதி’ – தொல்.திருமாவளவன் ஆவேசம்
