spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுஎனது காரை வழிமறித்த நிகழ்வு 'தற்செயலாக நடந்தது அல்ல; திட்டமிட்டசதி' - தொல்.திருமாவளவன் ஆவேசம்

எனது காரை வழிமறித்த நிகழ்வு ‘தற்செயலாக நடந்தது அல்ல; திட்டமிட்டசதி’ – தொல்.திருமாவளவன் ஆவேசம்

-

- Advertisement -

கடந்த அக்டோபர் – 07 அன்று எனது காரை வழிமறித்த நிகழ்வு ‘தற்செயலாக நடந்தது அல்ல; திட்டமிட்டசதி’ என விடுதலைகள் சிறுத்தைகள் கட்சித் தலைவா் தொல்.திருமாவளவன் கூறியுள்ளாா்.எனது காரை வழிமறித்த நிகழ்வு 'தற்செயலாக நடந்தது அல்ல; திட்டமிட்டசதி' - தொல்.திருமாவளவன் ஆவேசம்மேலும், இது குறித்து அவா் வெளியிட்டுள்ள அறிக்கையில், “உயர்நீதிமன்றம் அருகே தமிழ்நாடு வழக்கறிஞர்கள் சங்கத்தின் முன்பு கடந்த அக்டோபர் -07 அன்று எனது காரை வழிமறித்த நிகழ்வு ‘தற்செயலாக நடந்தது அல்ல; திட்டமிட்டசதி’ என்பது தெரியவருகிறது. ஆர்எஸ்எஸ் மற்றும் பாஜகவினர் இதன் பின்னணியில் உள்ளனர் என்றும் எமது விசாரணையில் உறுதிபட தெரிகிறது. எனவே, தமிழ்நாடுஅரசு இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து தீவிரமாக விசாரித்திட வேண்டும். பின்னணியில் உள்ள சதியினைக் கண்டறிய வேண்டும். அத்துடன், உடனடியாக இதனை ஒளிபரப்பு செய்த தனியார் தொலைகாட்சிகளைச் சார்ந்தவர்களையும் முழுமையாக அய்யமற விசாரித்திடவேண்டுமென கோருகிறோம்” என விடுதலைகள் சிறுத்தைகள் கட்சித் தலைவா் தொல்.திருமாவளவன் கூறியுள்ளாா்.

பழைய அடிமைகள் போதாது… புதிய அடிமைகளுக்கு பாஜக வலை வீச்சு!! – துணை முதலமைச்சர்

MUST READ