Homeசெய்திகள்தமிழ்நாடுஅவதூறு வழக்கு -  4 வாரங்களில் பதிலளிக்க சீமானுக்கு உயர்நீதிமன்றம் நோட்டீஸ்…

அவதூறு வழக்கு –  4 வாரங்களில் பதிலளிக்க சீமானுக்கு உயர்நீதிமன்றம் நோட்டீஸ்…

-

- Advertisement -

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது ஐ.பி.எஸ் அதிகாரி வருண்குமார் தொடர்ந்த அவதூறு வழக்கை ரத்து செய்த சென்னை உயர்நீதிமன்ற ஆணைக்கு எதிரான மேல்முறையீட்டு வழக்கில் பதிலளிக்க சீமானுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.அவதூறு வழக்கு -  4 வாரங்களில் பதிலளிக்க சீமானுக்கு உயர்நீதிமன்றம் நோட்டீஸ்…நாம் தமிழர் கட்சி நிர்வாகி சாட்டை துரைமுருகன் என்பவர் மீது  திருச்சி சைபர் கிரைம் உதவி ஆய்வாளரின் புகாரின் பேரில் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இந்த விவகாரத்தில் ஐ.பி.எஸ் அதிகாரி வருண்குமார் மீது நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கடுமையாக விமர்சனத்தை வைத்திருந்தார். மேலும் வருண்குமார் சாதி பாகுபாடு பார்ப்பதாகவும் குற்றம்சாட்டினார். அதேபோல நாம் தமிழர் கட்சியினர் சமூக வலைதளங்களிலும் வருண்குமார் ஐபிஎஸ் அதிகாரி மற்றும் அவரது குடும்பத்தினரை கடுமையாக விமர்சித்தனர்.

we-r-hiring

இந்நிலையில் ஐ.பிஎஸ் அதிகாரி  வருண்குமார், தன் மீதும், குடும்பத்தினர் மீதும் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானின் தூண்டுதலின் பேரில் நாம் தமிழர் கட்சியினர் சமூக வலை தளங்களில் அவதூறு கருத்து பதிவிடுவதாகவும்,  இது தொடர்பாக சீமான் உள்ளிட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என திருச்சி 4வது குற்றவியல் நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தாக்கல் செய்திருந்தார்.

இந்த வழக்கில் சீமான் திருச்சி குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜராகி விளக்கம் அளித்தார். இதனையடுத்து வருண்குமார் தொடர்ந்த அவதூறு வழக்கை ரத்து செய்யவும், விசாரணைக்கு தடை விதிக்கவும் கோரி சீமான் தரப்பில் சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனு மீதான விசாரணையின்போது சீமான் மீதான அவதூறு வழக்கு ரத்து செய்து உத்தரவிட்டது. மேலும் அதிகாரத்தில் உள்ளவர்களை விமர்சிக்க அரசியல்வாதிகளுக்கு உரிமை உள்ளது. இது போன்ற விவகாரங்களில் கீழமை நீதிமன்றங்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என உத்தரவிட்டது.

சீமான் மீதான அவதூறு வழக்கு ரத்து செய்யப்பட்ட உத்தரவை எதிர்த்து, வருண் குமார் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது.

அந்த மனு நீதிபதி விக்ரம் நாத் தலைமையிலான அமர்வில் விசாரணைக்கு வந்த போது, மனு தொடர்பாக நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் 4 வாரத்தில் பதில் அளிக்க நோட்டீஸ் பிறப்பித்து உத்தரவிட்டது.

தி.மு.க MP ஜெகத்ரட்சகன் சொத்துகள் பறிமுதல் வழக்கு – உச்சநீதிமன்றம் ரத்து

MUST READ