Homeசெய்திகள்தமிழ்நாடு2 ஆண்டுகளில் சுய உதவி குழுக்களுக்கு ரூ.25,642 கோடி கடன் - மு.க.ஸ்டாலின்

2 ஆண்டுகளில் சுய உதவி குழுக்களுக்கு ரூ.25,642 கோடி கடன் – மு.க.ஸ்டாலின்

-

2 ஆண்டுகளில் சுய உதவி குழுக்களுக்கு ரூ.25,642 கோடி கடன் – மு.க.ஸ்டாலின்

அரசின் திட்டங்கள் அனைவரையும் சென்று அடைய அதிகாரிகள் முழு மனதுடன் செயல்பட வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார்.

மூன்று நாள் பயணமாக இன்று சேலம் செல்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
Photo: CM MKStalin

சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற மாநில அளவிலான வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழு கூட்டத்தில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “சுய உதவிக் குழுக்களுக்கு வங்கி கடன் வழங்க ரூ.25,000 கோடி இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. இலக்கையும் தாண்டி ரூ.25,642 கோடி அளவிற்கு கடன் உதவி வழங்கப்பட்டுள்ளது.

சிறப்பு சுய உதவி குழுக்கள் தயாரிக்கும் பொருட்களை விற்பனை செய்ய ஏதுவாக மதி எக்ஸ்பிரஸ் வாகனங்கள் வழங்கப்பட உள்ளன. மதி திணை உணவகங்கள் ஒவ்வொரு மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகங்களிலும் செயல்படுத்தப்பட உள்ளன. உதவிக்குழு பொருட்களை விற்க சுற்றுலா தலங்களில் மதி அங்காடிகள் அமைக்கப்பட்டுள்ளன. முதலமைச்சரின் காலை உணவுத்திட்டம் விரிவாக்கம் செய்யப்பட்டு, அதில் சுய உதவிக்குழுக்களின் பங்கேற்பு ஏற்படுத்தப்படும். மகளிர் சுய உதவி குழுக்களால் தயாரிக்கப்படும் பொருட்களை தமிழகம் முழுவதும் கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்கப்படும்.

Meeting

இந்த ஆண்டு 10,000 சுயஉதவிக் குழுவினருக்கு பயிற்சி வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கடந்த 2 ஆண்டுகளில் சுய உதவி குழுக்களுக்கு அதிக வங்கி கடன் வழங்கி சாதனை படைத்துள்ளோம். 10,000 மகளிர் சுய உதவிக் குழுவினருக்கு சுழல்நிதி வழங்க ரூ.15,000 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. 3,000 கிராம ஒழிப்பு சங்கங்களுக்கு வறுமை குறைப்பு நிதியாக ரூ.7.50 கோடி மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. நன்றே செய் அதனை இன்றே செய் எனும் வகையில், அனைத்து மக்களுக்கும் நன்மை தரும் திட்டத்தை சிறிதும் தாமதம் இன்றி செயல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார்.

MUST READ