spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுஆளுநர் பதவியே கூடாது என்பதே எங்களது நிலைப்பாடு- மு.க.ஸ்டாலின்

ஆளுநர் பதவியே கூடாது என்பதே எங்களது நிலைப்பாடு- மு.க.ஸ்டாலின்

-

- Advertisement -

ஆளுநர் பதவியே கூடாது என்பதே எங்களது நிலைப்பாடு- மு.க.ஸ்டாலின்

‘தி இந்து’ ஆங்கில நாளிதழுக்கு திமுக தலைவரும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் பேட்டியளித்துள்ளார்.

"ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு 5 லட்சம் நிதி"- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!
Photo: CM MKStalin

செந்தில்பாலாஜியின் ஆதரவாளர்கள், வருமான வரித்துறை அதிகாரிகளைத் தாக்கினார்கள். இது தொடர்பாக நீங்கள் செந்தில்பாலாஜியைக் கண்டித்தீர்களா? என செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்துள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “அது தவறான செயல் தான். அதனை நான் கண்டித்தேன். அந்த தகவல் கிடைத்ததும், உடனடியாக அனைவரையும் காவல்துறை கலைத்தது. வருமான வரித்துறை அதிகாரிகளுக்கு உரிய பாதுகாப்பு தரப்பட்டது. வருமான வரித்துறை அதிகாரிகளை தாக்கியவர்களை கைது செய்துள்ளது இந்த அரசு. அதை பா.ஜ.க.வின் துணை அமைப்பாக பயன்படுத்தப்படும் வருமான வரித்துறையும் மறைக்கிறது. பத்திரிக்கையாளர்களாகிய நீங்களும் மறைக்கிறீர்கள்” என்றார்.

rn ravi mkstalin

we-r-hiring

தொடர்ந்து தமிழ்நாட்டில் ஆளுநருக்கும் முதலமைச்சருக்கும் இடையேயான உறவு மிகவும் சிக்கலான நிலைமைக்குச் சென்று விட்டது. இத்தகையச் சூழலில் ஆளுநருடன் இணைந்து செயல்படுவது சாத்தியமா? கூட்டணிக் கட்சிகள் எல்லோமே ஆளுநரைத் திரும்பப் பெற வேண்டும் என்று வலியுறுத்துகிறார்கள். நீங்களும் அதை வலியுறுத்துவீர்களா? என கேட்கபட்ட கேள்விக்கு, “ஆளுநர் ரவியை இங்கிருந்து மாற்றுவது மட்டுமல்ல, ஆளுநர் பதவியே கூடாது என்பதே எங்களது நிலைப்பாடு ஆகும்” என பதில் அளித்துள்ளார்.

MUST READ