Homeசெய்திகள்தமிழ்நாடுகல்வியை மாநில பட்டியலுக்கு மாற்றினால்தான் நீட் தேர்வை அகற்ற முடியும்: மு.க.ஸ்டாலின்

கல்வியை மாநில பட்டியலுக்கு மாற்றினால்தான் நீட் தேர்வை அகற்ற முடியும்: மு.க.ஸ்டாலின்

-

கல்வியை மாநில பட்டியலுக்கு மாற்றினால்தான் நீட் தேர்வை அகற்ற முடியும்: மு.க.ஸ்டாலின்

கல்வியை மாநில பட்டியலுக்கு மாற்றினால்தான் நீட் போன்ற கொடூரமான தேர்வு முறையை அகற்ற முடியும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

3வது முறையாக தேசியக் கொடி ஏற்றிய முதலமைச்சர் ஸ்டாலின்.. தியாகிகளின் குடும்ப ஓய்வூதியம் உயர்த்தி அறிவிப்பு!! - Update News 360

சுதந்திரன தின விழாவில் உரையாற்றிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “ஒரு கொடியின் கீழ் நாம் வாழ்ந்து வருகிறோம். கோட்டையில் பறக்கும் இந்த மூவர்ண கொடி, இந்தியாவை காக்கும் கொடி. சீன போரின் போது நேருவுக்கு துணை நின்றவர் அறிஞர் அண்ணா. கல்வியை மாநில பட்டியலுக்கு மாற்ற வேண்டும், அதைசெய்தால் நீட் போன்ற கொடூரமான தேர்வு முறை அகற்றப்படும். மாநிலம் முழுவதும் அனைத்து அரசுப் பள்ளிகளிலும் ஆகஸ்ட் 25 ஆம் தேதி முதல் காலை உணவுத்திட்டம் விரிவாக்கம் செய்யப்படும்.

பேருந்தில் பெண்கள் இலவசமாக பயணம் செய்யும் திட்டத்திற்கு விடியல் பயணம் என பெயர் சூட்டப்படுகிறது. ஓலா, ஊபேர், ஸ்விக்கி, சொமேட்டோ ஊழியர்களின் நலனை பாதுகாக்க தனி நல வாரியம் அமைக்கப்படும். பெண் ஆட்டோ ஓட்டுநர்கள், புது ஆட்டோ வாங்க ரூ.1 லட்சம் மானியம் வழங்கும் திட்டம், மேலும் 500 மகளிர் பயன்பெறும் வகையிலும், 3ம் பாலினத்தவர்களுக்கும் விரிவுப்படுத்தப்படும். சென்னை கத்தீட்ரல் சாலையில் உள்ள செங்காந்தன் பூங்காவிற்கு அருகே உள்ள 6.9 ஏக்கர் நிலத்தில் ரூ.25 கோடி செலவில் கலைஞர் நூற்றாண்டு பூங்கா அமைக்கப்படும். ஏற்றம் மிகு ஏழு திட்டங்கள் என்ற அடிப்படையில் 6வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து வழங்கப்படுகிறது. பல்வேறு தரப்பு மகளிரின் பொருளாதாரச் சுமையை குறைக்கும் வகையில், பேருந்துகளில் அவர்கள் கட்டணம் செலுத்தாமல் பயணிக்கக் கொண்டுவரப்பட்ட திட்டத்தின்கீழ் தினசரி 50 லட்சம் மகளிர் பயணிக்கின்றனர் இதுவரை இந்தத் திட்டத்தில் சுமார் 314 கோடி முறை பெண்கள் அரசுப் பேருந்துகளில் பாதுகாப்பான பயணம் மேற்கொண்டு பயனடைந்துள்ளனர். இந்தத் திட்டத்தால் ஒவ்வொருவரும் மாதம் ஒன்றுக்கு சராசரியாக ரூ.850 மேல் சேமிக்க முடிகிறது” என்றார்.

MUST READ