spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுஎன் சுறுசுறுப்புக்கு காரணம் மாணவர்கள், இளைஞர்கள்தான்- மு.க.ஸ்டாலின்

என் சுறுசுறுப்புக்கு காரணம் மாணவர்கள், இளைஞர்கள்தான்- மு.க.ஸ்டாலின்

-

- Advertisement -

என் சுறுசுறுப்புக்கு காரணம் மாணவர்கள், இளைஞர்கள்தான்- மு.க.ஸ்டாலின்

எப்போதும் என்னை சுறுசுறுப்பாக வைத்து இருப்பவர்கள் மாணவர்களும், இளைஞர்களும் தான் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

MKStalin

மாநில சிறுபான்மையினர் ஆணையம் சார்பில் நடைபெற்ற கலைஞர் நூற்றாண்டு விழாவின் பேச்சு போட்டி பரிசளிப்பு விழாவில் கலந்துகொண்டு உரையாற்றிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “எப்போதும் என்னை சுறுசுறுப்பாக வைத்து இருப்பவர்கள் மாணவர்களும், இளைஞர்களும் தான். இந்த பேச்சு போட்டிகளின் மூலம் அடையாளம் காணப்பட்ட இளம் பேச்சளர்கள் தான் தமிழுக்கும், தமிழ்நாட்டிற்கும் கிடைத்த பரிசு. பேச்சாற்றலை நம் தமிழ் நிலம் பயண்படுத்திக் கொண்ட வரலாற்றை அனைவரும் அறிந்துக்கொள்ள வேண்டும். திராவிட இயக்கம் என்பதே பேசியும், எழுதியும் வளர்ந்து இருக்கக்கூடிய இயக்கம். இளம் பேச்சாளர்களை கண்டறிந்து ஊக்குவிக்க வேண்டும்.

we-r-hiring

MKStalin

சிறுபான்மையினர் நலனுக்காக ஏராளமான திட்டங்களை அரசு செயல்படுத்திவருகிறது. இஸ்லாமியர்களுக்கு 3.5 சதவீதம் இட ஒதுக்கீடு திமுக ஆட்சியிலேயே வழங்கப்பட்டது. தமிழ்நாட்டுக்கு சமத்துவம், சமூகநீதி, சகோதரத்துவம், சுயமரியாதை, பகுத்தறிவு என தனி அடையாளம் உண்டு. பண்பட்ட தமிழ் அறிவை எல்லா மாணவர்களும் பெற வேண்டும். மாணவர்களே ஒற்றுமை, நல்லிணக்கம், மனிதநேயத்தை போற்றுங்கள். எண்ணங்களை அழுக்காக்கும் எண்ணங்களை புறந்தள்ளுங்கள். திமுக கூட்டங்களை மாலை நேர கல்லூரிகள் என அழைப்பது உண்டு” என்றார்.

MUST READ