Homeசெய்திகள்தமிழ்நாடுஸ்கூட்டரில் தாயும் மகனும் ஆன்மிக சுற்றுலா- இதுவரை 61 கி.மீ பயணம்

ஸ்கூட்டரில் தாயும் மகனும் ஆன்மிக சுற்றுலா- இதுவரை 61 கி.மீ பயணம்

-

தந்தை வாங்கித் தந்த ஸ்கூட்டரில் இந்தியாவில் உள்ள முக்கிய வழிபாட்டு தலங்களை சுற்றி பார்க்கும் தாயும், மகனும் இதுவரை 61 ஆயிரம் கிலோமீட்டர் தூரம் பயணித்துள்ளனர்.

Tour

கும்பகோணத்திற்கு இன்று கர்நாடக மாநிலம் மைசூரை சேர்ந்த கிருஷ்ணகுமார் (வயது 45 )என்பவர் தன் ஸ்கூட்டரில் தனது தாயை அழைத்துக் கொண்டு கோவில்களை சுற்றி பார்க்க வந்தார். மைசூர் அருகே போகாதி என்ற இடத்தை சேர்ந்த தட்சணாமூர்த்தி மனைவி ரத்தினம்மாள் ஆகியோரின் மகன் கிருஷ்ணகுமார் இவர்கள் குடும்பத்தில் மொத்தம் பத்து நபர்கள் இருந்தனர். அவர்களுக்கு உணவு சமைப்பதும் ,அவர்களைப் பார்த்துக் கொள்வதுமாக இருந்துள்ளார் ரத்தினம்மாள் .

இந்நிலையில் ரத்னம்மாவின் கணவர் சில ஆண்டுகளுக்கு முன் இறந்துவிட்டார். சிறிது நாட்கள் கழித்து தன் தாயிடம் சாதாரணமாக கிருஷ்ணகுமார் பேசிக்கொண்டிருந்தபோது திருவண்ணாமலை ,திருப்பதி, திருவரங்கம் ,ஆகிய கோயில்கள் பார்த்திருக்கிறீர்களா? என்று கேட்டுள்ளார். அப்போது அவர், உங்களை கவனித்து வளர்த்து ஆளாக்குவதிலேயே என் காலம் கடந்துவிட்டது. அப்பாவும் இறந்துவிட்டார். நான் பக்கத்து பேலூரில் உள்ள கோவிலுக்கு கூட சென்றதில்லை.
இனிமேல் எந்த கோவிலுக்கு செல்ல போகிறேன் என கண்ணீர் மல்க கூறியுள்ளார்.

இதனை கேட்ட கிருஷ்ணகுமார் தன் தாய் 50 வருடங்களுக்கு மேலாக வீட்டிலேயே இருந்துள்ளார். இவர் எந்த கோயிலுக்கும் செல்லவில்லை என்பதை உணர்ந்து பக்கத்து ஊர் கோவிலென்ன இந்தியாவில் உள்ள முக்கிய கோயில்களை எல்லாம் சுற்றி காட்டுகிறேன் என தாயிடம் கூறி ,
பார்த்து வந்த பணியினை கடந்த 2018ம் ஆண்டு ஜனவரி 14ம் தேதி விட்டு விட்டு, தனது தந்தை வாங்கி கொடுத்த ஸ்கூட்டருடன் , 16.1.18 அன்று ஆன்மீக யாத்திரா பயணத்தை தொடங்கி ஆந்திரா, மகாராஷ்டிரா ,கேரளா, சட்டீஸ்கர் ,உத்திரப்பிரதேசம், கோவா ,புதுச்சேரி ,தமிழ்நாடு உள்ளிட்ட பல மாநிலங்களில் புகழ்பெற்ற கோயில்கள், தேவாலயங்கள், மசூதிகள் உள்ளிட்ட ஆன்மீக தலங்களுக்குச் சென்றதுடன், நேபாள் நாட்டிற்கும் சென்றுவந்துள்ளார்.

இதன் தொடர்ச்சியாக பல்வேறு வழிபாட்டுத் தலங்களுக்கு சென்று விட்டு இன்று கும்பகோணம் வந்தனர். அவர்கள் கும்பகோணத்தில் உள்ள விஜயேந்திரர் மடத்திற்கு வந்து தரிசனம் செய்ததுடன், சிறிது நேரம் அங்கே தங்கி விட்டு மேலும் தங்களது பயணத்தை தொடர்ந்தனர். பயணம் தொடர்பாக கிருஷ்ணகுமார் கூறுகையில், எனது தாய்க்காக இந்தியாவில் உள்ள கோவில்களை சுற்றி காட்டவே நான் இந்த பயணத்தை துவங்கி உள்ளேன். தனது தந்தை வாங்கி கொடுக்க ஸ்கூட்டரில் இதுவரை 61 ஆயிரம் கிலோமீட்டர்கள் கடந்து இரண்டு சக்கர வாகனத்திலேயே என் தாயை அழைத்துக் கொண்டு வந்துள்ளேன் .

இதன்மூலம் எங்கள் பயணத்தில் எனது தந்தையும் இருப்பதாக நான் உணர்கிறேன் என்றும், ஒவ்வொருவரும் 24 மணி நேரத்தில் ஒரு மணி நேரமாவது குடும்பத்திற்காக ஒதுக்கி,தாய் – தந்தையர்கள் விரும்பியதை செய்து கொடுக்கும் படி கேட்டுக் கொண்டார் .

MUST READ