
“லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிக்கும் 171-வது படம் தாமதமாக வந்தாலும், நன்றாக வரும்” என்று நடிகர் ரஜினிகாந்த் நம்பிக்கைத் தெரிவித்துள்ளார்.

விஜய் மக்கள் இயக்கம் சார்பில் தந்தை பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை
கோவை மாவட்டம், சூலூரில் நடைபெறவிருக்கும் குடும்ப விழாவில் பங்கேற்பதற்காக, சென்னை போயஸ் கார்டர்ன் இல்லத்தில் இருந்து கார் மூலம் சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு சென்று, அங்கிருந்து தனி விமானம் மூலம் கோவை விமான நிலையத்திற்கு சென்றடைந்தார்.
முன்னதாக செய்தியாளர்களைச் நடிகர் ரஜினிகாந்திடம், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிக்கவிருக்கும் திரைப்படம் குறித்து கேட்கப்பட்டது. அதற்கு தற்போது லைகா தயாரிப்பில் உள்ள திரைப்படத்தில் நடித்து வருவதாகவும், அதனை முடித்து விட்டு தான் இந்த படத்தில் நடிக்கவிருப்பதாகத் தெரிவித்துள்ளார். மேலும், இந்த திரைப்படம் தாமதமாக வந்தாலும், நன்றாக வரும் என்று நடிகர் ரஜினிகாந்த் நம்பிக்கைத் தெரிவித்துள்ளார்.
“வங்கிகள் பிடித்தம் செய்ய வேண்டாம்”- நிதியமைச்சர் தங்கம் தென்னரசு அறிவுறுத்தல்!
அதேபோல், சென்னை விமான நிலையத்தில் நடிகர் ரஜினிகாந்த் கூறியதாவது, “ஆந்திர முன்னாள் முதலமைச்சரும், தெலுங்கு தேசம் கட்சியின் தலைவருமான சந்திரபாபு நாயுடுவைச் சந்திக்க இருந்தேன் ஆனால் குடும்ப விழா காரணமாக அது நடக்கவில்லை” எனத் தெரிவித்துள்ளார்.