Homeசெய்திகள்தமிழ்நாடு"மாநகராட்சி மேயர், துணை மேயர், மன்ற உறுப்பினர்களுக்கு மதிப்பூதியம்"- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு!

“மாநகராட்சி மேயர், துணை மேயர், மன்ற உறுப்பினர்களுக்கு மதிப்பூதியம்”- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு!

-

 

முதலமைச்சர் தலைமையில் நடைபெற்ற தி.மு.க. உயர்நிலை செயல் திட்டக் குழு கூட்டம்!
Photo: CM MKStalin

தமிழகத்தில் மாநகராட்சி மேயர்கள், துணை மேயர்கள், நகராட்சித் தலைவர்கள், பேரூராட்சித் தலைவர்கள், மாநகராட்சி மன்ற உறுப்பினர்கள், நகர் மன்ற உறுப்பினர்கள், பேரூராட்சி மன்ற உறுப்பினர்கள் உள்ளிட்டோருக்கு மாதந்தோறும் மதிப்பூதியம் வழங்க தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

ரஜினி, நெல்சன் திலீப் குமார் கூட்டணியின் ஜெயிலர்…… செகண்ட் சிங்கிள் ரிலீஸ் அப்டேட்!

இது தொடர்பாக, தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “மாநகராட்சி மேயர்களுக்கு மாதந்தோறும் ரூபாய் 30,000, துணை மேயர்களுக்கு ரூபாய் 15,000, மாநகராட்சி மன்ற உறுப்பினர்களுக்கு ரூபாய் 10,000 வழங்கப்படும். இதேபோன்று, நகராட்சி மன்றத் தலைவர்களுக்கு ரூபாய் 15,000, துணைத் தலைவர்களுக்கு ரூபாய் 10,000 மற்றும் நகர் மன்ற உறுப்பினர்களுக்கு ரூபாய் 5,000 வழங்கப்படும்.

மேலும், பேரூராட்சித் தலைவர்களுக்கு ரூபாய் 10,000, பேரூராட்சித் துணைத் தலைவர்களுக்கு ரூபாய் 5,000 மற்றும் பேரூராட்சி மன்ற உறுப்பினர்களுக்கு ரூபாய் 2,500 மதிப்பூதியம் வழங்கப்படும். இந்த மதிப்பூதியம் இம்மாதம் அதாவது 2023- ஆம் ஆண்டு ஜூலை முதல் வழங்கப்படும்.

மோகன்லால் நடிப்பில் உருவாகும் பான் இந்தியா படம்….. சூட்டிங் எப்போது?

இந்நடவடிக்கை, நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளின் நிர்வாகத் திறனை வலுப்படுத்துவதற்கு அரசு மேற்கொண்டு வரும் பல்வேறு நடவடிக்கைகளில் ஒரு முக்கிய மைல் கல்லாக அமைந்துள்ளது” எனத் தெரிவித்துள்ளார்.

MUST READ