spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாரஜினி, நெல்சன் திலீப் குமார் கூட்டணியின் ஜெயிலர்...... செகண்ட் சிங்கிள் ரிலீஸ் அப்டேட்!

ரஜினி, நெல்சன் திலீப் குமார் கூட்டணியின் ஜெயிலர்…… செகண்ட் சிங்கிள் ரிலீஸ் அப்டேட்!

-

- Advertisement -

ரஜினியின் ஜெயிலர் படத்தின் இரண்டாம் சிங்கிள் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

ஜெய்லர் திரைப்படத்தில் ரஜினிகாந்த், ரம்யா கிருஷ்ணன், தமன்னா, மோகன்லால், சிவராஜ் குமார் மற்றும் பலர் நடித்துள்ளனர். சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் சார்பில் கலாநிதி மாறன் படத்தை தயாரித்துள்ளார். இந்தப் படத்தை டாக்டர், பீஸ்ட் உள்ளிட்ட படங்களை இயக்கிய நெல்சன் திலீப் குமார் இயக்கியுள்ளார். அனிருத் இதற்கு இசை அமைத்துள்ளார். ரஜினி படத்தில் முத்துவேல் பாண்டி என்ற கதாபாத்திரத்தில் ஓய்வு பெற்ற ஜெயிலராக நடித்திருக்கிறார். படத்தின் படப்பிடிப்பு முழுவதும் நிறைவடைந்து தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த படம் வருகின்ற ஆகஸ்ட் 10ஆம் தேதி திரையிடப்பட இருக்கிறது.

we-r-hiring

சமீபத்தில் இந்த படத்தின் காவாலா எனும் பாடல் வெளியாகி மெகா ஹிட் ஆகியுள்ளது. தமன்னாவின் துள்ளலான நடனத்தில் உருவாகியுள்ள இந்த பாடல் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் வெகுவாக கவர்ந்துள்ளது.

தற்போது ஜெயிலர் திரைப்படத்தின் ‘ஹுக்கும் டைகர் கா ஹுக்கும்’ – (இது டைகரின் கட்டளை) எனும் இரண்டாம் சிங்கிள் வருகின்ற ஜூலை 17ஆம் தேதி வெளியாகும் என்று படக்குழுவினர் வீடியோ ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ளனர்.

MUST READ