spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுமுரசொலி மாறனின் 90-வது பிறந்த தினம்- முதல்வர் மரியாதை

முரசொலி மாறனின் 90-வது பிறந்த தினம்- முதல்வர் மரியாதை

-

- Advertisement -

முரசொலி மாறனின் 90-வது பிறந்த தினம்- முதல்வர் மரியாதை

முன்னாள் மத்திய அமைச்சர் முரசொலி மாறனின் 90-வது பிறந்த தினத்தை முன்னிட்டு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் திருவுருவ படத்திற்கு மாலை மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

Image

மறைந்த ஒன்றிய அமைச்சரும் திமுக முன்னோடியுமான முரசொலி மாறனின் 90 வது பிறந்தநாள் இன்று தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நாளை முன்னிட்டு அவரது திருஉருவ சிலைக்கும் திருவுருவ படத்திற்கும் ஏராளமான பொதுமக்கள் திமுக நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி வருகின்றனர்.

we-r-hiring

இந்நிலையில் இரண்டு நாள் சுற்றுப்பயணமாக மதுரை ராமநாதபுரம் வருகை தந்துள்ள தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று காலை மதுரையில் இருந்து ராமநாதபுரம் செல்லும் சாலையில் சிலை மான் என்ற கிராமத்தில் ஐயா முரசொலி மாறனின் திருஉருவ படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினார். இந்த அண்ணா மன்றம் 1952-ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது. இந்த மன்றத்தில் முரசொலி மாறனின் புகைப்படம் உள்ளது. இந்த மன்றத்தில் முரசொலி மாறன் படத்திற்கு மலர் தூவி மரியாதை செய்த பின்னர் பொது மக்களை சந்தித்து மனுக்களை பெற்றுக் கொண்டார்.

Image

 

இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள் மூர்த்தி, எ.வ. வேலு, பொன்முடி, கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன் மற்றும் ஏராளமான திமுக நிர்வாகிகள் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

MUST READ