Homeசெய்திகள்தமிழ்நாடு“ஆளுநர் விருந்து- முதல்வர் மோதலை தவிர்க்கவே விரும்புகிறார்”

“ஆளுநர் விருந்து- முதல்வர் மோதலை தவிர்க்கவே விரும்புகிறார்”

-

- Advertisement -

குடியரசு தினவிழாவையொட்டி நடத்தப்பட்ட ஆளுநர் தேநீர் விருந்தில் முதல்வர் பங்கேற்றது குறித்து முரசொலியில் கட்டுரை வெளியாகியுள்ளது.

stalin rn ravi

we-r-hiring

கடந்த ஜனவரி நான்காம் தேதி சென்னையில் நடந்து விழாவில் பேசிய தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி, தமிழ்நாடு என்று சொல்வதை விட தமிழகமென்று சொல்வதைப் பொருத்தமானதாக இருக்கும் என்று கூறி சர்ச்சையை ஏற்படுத்தினார். தொடர்ந்து சட்டமன்றத்தில் ஆளுநர் உரையின் போது சில வார்த்தைகளை சேர்த்தும் சில வார்த்தைகளை தவிர்த்தும் பேசினார். இதற்கு எதிராக உடனடியாக தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தீர்மானத்தை முன்மொழிந்தார் .. இந்த சம்பவம் தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ஆளுநருக்கு எதிரான எதிர்ப்புகள் வலுத்தன. திமுக கூட்டணி கட்சிகள் போராட்டத்தில் ஈடுபட்டன. ஆளுநரை திரும்பப் பெற வேண்டும் என்ற கோரிக்கைகளும் வலுத்தன.

இதையடுத்து தமிழகம் என்பது குறித்து தவறாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளது என்று மறுப்பு தெரிவித்தார் ஆளுநர். இந்த நிலையில் ஆளுநரின் தேநீர் விருந்தை புறக்கணிப்பதாக திமுக கூட்டணி கட்சிகள் ஒட்டுமொத்தமாக அறிவித்தன. இப்படி மோதல் போக்கு உச்சக்கட்டத்தை எட்டிய நிலையில், குடியரசு தின விருந்தில் பங்கேற்குமாறு ஆளுநர் தனிப்பட்ட முறையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொலைப்பேசியில் அழைப்பு விடுத்தார். இதையடுத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும் ஆளுநர் விருந்தில் கலந்துகொண்டார். அவருடன் அமைச்சர்கள் துரைமுருகன், உதயநிதி ஸ்டாலின், ஐ.பெரியசாமி,ஏ.வ.வேலு ,பொன்முடி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

Modi rn ravi

இந்நிலையில் முரசொலி தலையங்கள் வெளியிட்டுள்ள கட்டுரையில், “முதல்வர் மோதல்களை தவிர்ப்பவரே தவிர, மோதலுக்கு தயாராக இருப்பவர் அல்ல. அவரது கண்களுக்கு தெரிவதெல்லாம் சீரான ஆட்சி, வெகு மக்களுக்கு ஆற்ற வேண்டிய நற்பணிதான். பெருந்தன்மையுடன் கூடிய அணுகுமுறையையே குடியரசு நாள் நிகழ்வுகளிலும் பின்பற்றினார். ஆக்கப்பூர்வமான செயல்பாடுகள் தேக்கநிலை அடைய வேண்டுமென ஆளுநரும் இடம் தரவில்லை” எனக் குறிப்பிட்டுள்ளது.

MUST READ