ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்வது தனது கனவு என்றும் பதக்கம் வெல்வதற்கு உறுதுணையாக இருந்த முதலமைச்சருக்கும் துணை முதலமைச்சருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்வதாகவும் தடகள வீராங்கனை எட்வினா ஜேசன் தெரிவித்தார்.
பக்ரைனில் நடைபெற்ற ஆசிய இளையோர் தடகள சாம்பியன்ஷிப் தொடரில் 2 வெள்ளி பதக்கங்களை வென்ற தமிழ்நாட்டைச் சேர்ந்த எட்வினா ஜேசனுக்கு சென்னை விமான நிலையத்தில், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த, தடகள வீராங்கனை எட்வினா ஜேசன், ”பக்ரைனில் நடைபெற்ற ஆசிய இளையோர் தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் இரண்டு வெள்ளி பதக்கங்களை வென்றுள்ளேன். இது என்னுடைய சர்வதேச போட்டியில் முதல் பதக்கம். முதலாவதாக நான் முதலமைச்சர் அவர்களுக்கும் மற்றும் துணை முதலமைச்சர் உதய் அண்ணாவிற்கும் நன்றி சொல்ல விரும்புகிறேன்.
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்திற்கும், எனது பயிற்சியாளர்களுக்கும், என் பெற்றோருக்கும் நன்றி சொல்ல விரும்புகிறேன். ”ஒலிம்பிக் போட்டியில் பதக்கம் வெல்வதே எனது கனவு” என்றும் அனைத்து வசதிகளும் தமிழ்நாடு அரசு செய்து தந்துள்ளது என்று தெரிவித்தார்.
இதை தொடர்ந்து பேசிய பயிற்சியாளர் மகேஷ்,
“முதலமைச்சருக்கும் துணை முதலமைச்சருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். சிறிய கிராமத்திலிருந்து பயிற்சி அளித்து பல்வேறு சர்வதேச போட்டிகளில் விளையாட வாய்ப்பு அளித்ததற்கு நன்றி” என தெரிவித்தார்.
தினமும் போலி வெடிகுண்டு மிரட்டலால் சமூகத்தில் பதற்றத்தை ஏற்படுத்துகிறது – செல்வப்பெருந்தகை


