spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடு"எனது பெயரைக் கூற பிரதமருக்கு மனமில்லை"- கனிமொழி எம்.பி. பேட்டி!

“எனது பெயரைக் கூற பிரதமருக்கு மனமில்லை”- கனிமொழி எம்.பி. பேட்டி!

-

- Advertisement -

 

"எனது பெயரைக் கூற பிரதமருக்கு மனமில்லை"- கனிமொழி எம்.பி. பேட்டி!

we-r-hiring

“எனது பெயரைக் கூட சொல்வதற்கு பிரதமர் நரேந்திர மோடிக்கு மனமில்லை” என்று தி.மு.க. எம்.பி. கனிமொழி தெரிவித்துள்ளார்.

நீதிமன்ற அவமதிப்பு- பதஞ்சலிக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்!

சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த கனிமொழி எம்.பி., “குலசேகரப்பட்டினம் ஏவுதளத்திற்கு அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது, தி.மு.க. அரசின் முயற்சிக்கு கிடைத்த வெற்றி. மாநில அரசின் திட்டங்களுக்கு தான் மத்திய அரசு ஸ்டிக்கர் ஒட்டுகிறது. குலசேகரப்பட்டினம் திட்டம் கொண்டு வர பல்வேறு முயற்சிகளை தி.மு.க. அரசு தொடர்ந்து எடுத்து வருகிறது. எனது பெயரைக் கூட சொல்வதற்கு பிரதமர் நரேந்திர மோடிக்கு மனமில்லை” என்று விமர்சித்துள்ளார்.

குலசேகரப்பட்டினத்தில் இஸ்ரோவின் ராக்கெட் ஏவுதளம் அமைப்பதற்கு பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டியுள்ள நிலையில், இது குறித்து தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ள கனிமொழி எம்.பி., “குலசேகரப்பட்டினத்தில் ராக்கெட் ஏவுதளம் அமைத்திடும் தலைவர் கலைஞர் அவர்களின் கனவு நனவாகியுள்ளது!

இமாச்சலில் உச்சக்கட்ட அரசியல் குழப்பம்!

தொடர் கடிதங்கள், நாடாளுமன்றத்தில் கோரிக்கை, துறைசார் அமைச்சர்கள் – அதிகாரிகள் சந்திப்பு என பத்து ஆண்டுகால நம் விடாமுயற்சியால் இன்று அடிக்கல் நாட்டப்படும் இத்திட்டம், தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு பெரும் உந்துசக்தியாக இருக்கும்” என்று குறிப்பிட்டுள்ளார்.

MUST READ