spot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுபோலி மருந்து விவகாரத்தில் கைதான  என்.ஆர். காங்கிரஸ் நிர்வாகி மணிகண்டன், கட்சியில் இருந்து நீக்கம்!

போலி மருந்து விவகாரத்தில் கைதான  என்.ஆர். காங்கிரஸ் நிர்வாகி மணிகண்டன், கட்சியில் இருந்து நீக்கம்!

-

- Advertisement -

புதுச்சேரியில் போலி மருந்து விவகாரத்தில் கைதான  என்.ஆர். காங்கிரஸ் கட்சியின் நிர்வாகி மணிகண்டனை, கட்சியில் இருந்து நீக்கி கட்சி தலைமை நடவடிக்கை எடுத்துள்ளது.

we-r-hiring

புதுச்சேரி மேட்டுப்பாளையம் மற்றும் திருபுவனை பாளையத்தில் போலி மருந்து தொழிற்சாலை கண்டுபிடிக்கப்பட்டது. இங்கிருந்து இதய நோய், ரத்த அழுத்தம் உள்ளிட்ட பிரதான நோய்களுக்கு பிரபல நிறுவனத்தின் போலி மருந்துகள் தயாரிக்கப்பட்டு நாடு முழுவதும் விநியோகம் செய்யப்பட்டுள்ளன. கடந்த 4 ஆண்டுகளுக்கு மேலாக இயங்கி வந்த இந்த தொழிற்சாலை மூலம் சுமாா் ரூ. 2 ஆயிரம் கோடி வரை மருந்து விநியோகம் நடந்திருக்கலாம் என கூறப்படுகிறது. மேலும், போலி மருந்து தொழிற்சாலையில் இருந்து நவீன இயந்திரங்கள், பல கோடி மதிப்பு மருந்துகளை போலீசார் பறிமுதல் செய்தனர். போலி மருந்துகள் தயாரித்ததில் முக்கிய நபராகக் கருதப்படும் போலி மருந்து தொழிற்சாலை உரிமையாளர் ராஜா, முன்னாள் ஐ.எப்.எஸ் அதிகாரி சத்தியமூர்த்தி மற்றும் அவரது கூட்டாளிகள் 15 போ் உள்ளிட்ட 21 போ் கைது செய்யப்பட்டுள்ளனா்.

இதனிடையே போலி மருந்து, மாத்திரைகள் தயாரித்து, நாடு முழுவதும் விநியோகித்த விவகாரத்தில், ஆளும் கட்சியினர் மற்றும் பாஜகவை சேர்ந்த சபாநாயகர் செல்வம் ஆகியோருக்கு தொடர்பு இருப்பதால் சிபிஐ விசாரணை நடத்தக்க்கோரி திமுக, காங்கிரஸ், பாஜக உள்ளிட்ட கட்சிகள் மற்றும் சமூக அமைப்புகள் துணைநிலை ஆளுநரிடம் கோரிக்கை விடுத்திருந்தன. இந்த பிரச்னையில் பல்வேறு மாநிலங்களைச் சோ்ந்த நபா்களுக்கு தொடா்புள்ளதால், தேசிய அளவிலான விசாரணை அவசியம் என்று கருதி, புதுச்சேரி சிபிசிஐடி மற்றும் போலீஸ் மற்றும் சிறப்பு விசாரணை குழு நடத்தி வந்த விசாரணையை சிபிஐ மற்றும் என்ஐஏ அமைப்புகள் மேற்கொள்ள துணைநிலை ஆளுநா் கைலாஷ்​நாதன் பரிந்துரை செய்தார். துணைநிலை ஆளுநா் கைலாஷ்​நாதன் திடீரென நேற்று டெல்லி சென்ற நிலையில், ​போலி மருந்து தயாரிப்பு வழக்கை சிபிஐக்கு மாற்றி மத்​திய அரசு உத்தரவிட்டுள்ளது.

இந்நிலையில் போலி மருந்து விவகாரம் புதுச்சேரியில் விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையில், போலி மருந்து விவகாரத்தில் கைதாகி சிறையில் உள்ள ஆளும் என்.ஆர். காங்கிரஸ் கட்சியின் மாநில பிற்படுத்தப்பட்டோர் அணியின் செயலாளர், மணிகண்டனை கட்சியில் இருந்து நீக்கி, அக்கட்சியின் பொதுச்செயலாளர் ஜெயபால் நடவடிக்கை எடுத்துள்ளார்.

MUST READ