Homeசெய்திகள்தமிழ்நாடு'முதலமைச்சர் குறித்து அவதூறு'- நாம் தமிழர் கட்சி பிரமுகர் கைது!

‘முதலமைச்சர் குறித்து அவதூறு’- நாம் தமிழர் கட்சி பிரமுகர் கைது!

-

- Advertisement -

 

'முதலமைச்சர் குறித்து அவதூறு'- நாம் தமிழர் கட்சி பிரமுகர் கைது!

முதலமைச்சர் குறித்து சமூக வலைதளத்தில் அவதூறு பரப்பியதாக நாம் தமிழர் கட்சி பிரமுகர் காளியை சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

வன்னியர்களுக்கு 10.5% இட ஒதுக்கீட்டை விரைந்து வழங்க வேண்டும் – ராமதாஸ் வலியுறுத்தல்!

தருமபுரி மாவட்டம், செல்லியம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் காளி (எ) காளியப்பன். இவர் நாம் தமிழர் கட்சியில் பணியாற்றி வருகிறார். தமிழ்நாடு முதலமைச்சர் பற்றியும், தி.மு.க.வைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் பற்றியும், தி.மு.க.வினர் பற்றியும், சமூக வலைத்தளத்தில் அவதூறான கருத்துக்களைப் பதிவிட்டு புகைப்படங்களையும், சித்தரிக்கப்பட்ட காட்சிகளையும் பரப்பி வந்துள்ளார்.

இது குறித்த புகாரின் பேரில் சைபர் கிரைம் காவல்துறையினர், சமூக வலைதளங்களில் பதிவிடப்பட்டிருந்த பதிவுகளை ஆய்வு செய்து விசாரணை மேற்கொண்டனர். அதில், நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த காளி என்கிற காளியப்பன் தான், அவதூறான கருத்துப் பதிவுகளை மேற்கொண்டது உறுதியானது. இதனையடுத்து வழக்கு தொடர்பான ஆவணங்கள் மற்றும் ஆதாரங்களைத் திரட்டிய சைபர் கிரைம் காவல்துறையினர் செல்போன் நெட்வொர்க் உதவியுடன் காளி இருக்கும் இடத்தை கண்டுபிடித்தனர்.

தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்திற்கு 11 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!

அதைத் தொடர்ந்து, சென்னை மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் தனிப்படை காவல்துறையினர் காளி (என்கின்ற) காளியப்பனை தருமபுரியில் வைத்து அதிரடியாக கைது செய்தனர். அதைத் தொடர்ந்து, சென்னைக்கு அழைத்துச் செல்லப்பட்ட காளியை சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் வைத்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

பல்வேறு அவதூறு பதிவுகளை வெளியிட்ட காளியின் சமூக வலைதளப் பக்கத்தை சைபர் கிரைம் காவல்துறையினர் முடக்கியுள்ளனர்.

MUST READ