Homeசெய்திகள்தமிழ்நாடுநயினார் நாகேந்திரனுக்கு எதிரான வழக்கு தள்ளுபடி!

நயினார் நாகேந்திரனுக்கு எதிரான வழக்கு தள்ளுபடி!

-

- Advertisement -

 

நயினார் நாகேந்திரனுக்கு எதிரான வழக்கு தள்ளுபடி!

நெல்லை மக்களவைத் தொகுதியில் பா.ஜ.க. சார்பில் போட்டியிடும் வேட்பாளர் நயினார் நாகேந்திரனின் வேட்பு மனுவை நிராகரிக்கக் கோரிய வழக்கை தள்ளுபடி செய்தது சென்னை உயர்நீதிமன்றம்.

“தமிழ்நாட்டின் பலத்தைக் குறைக்க மோடியின் சதித்திட்டம்”- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு!

மதுரையைச் சேர்ந்த வழக்கறிஞர் மகாராஜா என்பவர் நெல்லை மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் பா.ஜ.க. வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அந்த மனுவில், “நயினார் நாகேந்திரன் தன் மீதான வழக்கு குறித்த விவரங்களை வேட்பு மனுவில் குறிப்பிடவில்லை; நயினார் நாகேந்திரன் வேட்பு மனுவை நிராகரிக்க ஆட்சேபம் தெரிவித்த போது, விசாரணை நடத்தவில்லை” என தெரிவித்திருந்தார்.

சுங்கச்சாவடியை அகற்றக்கோரி கடையடைப்பு!

இந்த வழக்கு இன்று (ஏப்ரல் 16) காலை 10.30 மணிக்கு விசாரணைக்கு வந்த போது நீதிபதிகள், “தேர்தல் நடவடிக்கைகள் முடியும் தருவாயில் இருப்பதால் எந்த உத்தரவும் பிறப்பிக்க முடியாது; தேர்தல் முடிந்த பிறகு வேண்டுமானால் மனுதாரர் தேர்தல் ஆணையத்தை நாடலாம்” எனக் கூறி நயினார் நாகேந்திரனுக்கு எதிரான மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

MUST READ