திராவிட இயக்க பேச்சாளர் நாஞ்சில் சம்பத் உடல் நலக்குறைவு காரணமாக நாகர்கோவில் ஆசாரிப்பள்ளம் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

திராவிட இயக்க பேச்சாளர் நாஞ்சில் சம்பத்துக்கு ஏற்கனவே மூளையில் ஏற்பட்ட ரத்த கசிவு காரணமாக வலிப்பு , ஞாபக மறதி உள்ளிட்ட உடல்நலப் பிரச்சினைகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது. இந்த நிலையில் சென்னையிலிருந்து ரயில் மூலம் நாகர்கோவில் வந்த அவர் வலிப்பு நோயால் பாதிக்கப்பட்டு பகுதி சுயநினைவை இழந்ததால் திருவனந்தபுரம் cosmopolitan மருத்துவமனையில் சிகிச்சை மேற்கொண்டார்.
பின்னர் நாகர்கோவில் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக IMCU -2 வார்டில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு தற்போது உரிய ஞாபகத்திறன் இல்லை என்று கூறப்படுகிறது. இது சீராக 3 நாட்கள் ஆகும் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். தொடர்ந்து அவருக்கு ஆசாரி பள்ளம் மருத்துவ கல்லூரி மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர்.
