Homeசெய்திகள்தமிழ்நாடு“ஒரு கட்சிக்கு சமாதி கட்ட ஒரு செங்கல் போதும் என கண்டுபிடித்தவர் உதயநிதி ஸ்டாலின்”

“ஒரு கட்சிக்கு சமாதி கட்ட ஒரு செங்கல் போதும் என கண்டுபிடித்தவர் உதயநிதி ஸ்டாலின்”

-

- Advertisement -

யுத்த காலத்தில் தந்தையின் சுமைகளை பகிர்ந்துகொள்ள இன்ப தமிழகம் பயணம் செய்து ஒரு கட்சிக்கு சமாதி கட்ட ஒரு செங்கல் போதும் என கண்டுபிடித்தவர் உதயநிதி ஸ்டாலின் என நாஞ்சில் சம்பத் தெரிவித்துள்ளார்.

சென்னையை அடுத்த பல்லாவரத்தில் பேராசிரியர் அன்பழகன் நூற்றாண்டு விழா நிறைவு பொதுக்கூட்டம் சட்டமன்ற உறுப்பினர் இ.கருணாநிதி தலைமையில் நடைபெற்றது, இதில் கலந்துக்கொண்டு பேசிய திமுக பேச்சாளர் நாஞ்சில் சம்பத், “யுத்த காலத்தில் தந்தையின் சுமைகளை பகிர்ந்துகொள்ள தமிழகம் முழுவதும் பயணம் செய்தவர் உதயநிதி ஸ்டாலின். 246 இளைஞர் பாசறை கூட்டங்களை நடத்தி ஒரு கட்சி சமாதிகட்ட குழி தோண்ட தேவையில்லை. ஒரு செங்கல் போதும் என கண்டுபிடித்தவர் தான் உதயநிதி.

we-r-hiring

அவர் படத்தயாரிப்பாளராகவும், நடிகராகவும் உள்ளார், 6 படங்கள் நடிக்க ஒப்பந்தம் செய்த நிலையில் அவைகளை கட்சிகாக தியாகம் செய்து அமைச்சர் பொருப்பேற்றுள்ளார்” என்று கூறினார்.

MUST READ