Homeசெய்திகள்தமிழ்நாடு"இம்முறை ஏற்பட்டது இயற்கை வெள்ளம்"- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேட்டி!

“இம்முறை ஏற்பட்டது இயற்கை வெள்ளம்”- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேட்டி!

-

 

"இம்முறை ஏற்பட்டது இயற்கை வெள்ளம்"- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேட்டி!
Photo: CM MKSTALIN

இம்முறை சென்னை எதிர்கொண்டது இயற்கை வெள்ளம் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

சென்னையில் இருந்து விலகிய ‘மிக்ஜாம்’ புயல்!

‘மிக்ஜாம்’ புயல் பாதிப்பு குறித்தும், நிவாரண முகாம்கங்களில் ஆய்வு செய்த பின் பெருநகர சென்னை மாநகராட்சி அலுவலகமான ரிப்பன் மாளிகையில் செய்தியாளர்களைச் சந்தித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “சென்னையில் மழையின் பாதிப்பு கடந்த காலங்களை விடக் குறைந்துள்ளது. அரசின் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளால் மழையால் பாதிப்பின் தாக்கம் குறைந்துள்ளது. மிகப்பெரிய வெள்ளம் ஏற்பட்டாலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளால் பாதிப்புகள் மிகவும் குறைவாக உள்ளது.

கடந்த 2015- ஆம் ஆண்டு மழையின் போது, 119 பேர் பலியான நிலையில் இம்முறை அதிகம் மழை பெய்தும் 7 பேர் மட்டுமே உயிரிழந்துள்ளனர். கடல் சீற்றம் காரணமாக, ஆறுகளின் தண்ணீர் கடலில் கலக்காமல் தண்ணீர் வடிவதில் தாமதமானது. கடந்த 2015- ஆம் ஆண்டு ஏற்பட்டது செயற்கை வெள்ளம்; இம்முறை சென்னை எதிர்கொண்டது இயற்கை வெள்ளம். ரூபாய் 4,000 கோடியில் பணிகள் நடந்ததால் தான் சென்னையில் பாதிப்புக் குறைவாக இருக்கின்றன.

ராயபுரத்தில் பொதுமக்கள் சாலை மறியல்…..மின்விநியோகம் சீரடைந்துள்ள பகுதிகள்!

மழை நிற்பதற்கு முன்பே வெளி மாவட்ட பணியாளர்கள் சென்னைக்கு வரவழைக்கப்பட்டு மீட்புப் பணிகள் தொடங்கின. சென்னையில் இயல்பு நிலை வெகு விரைவில் திரும்ப மீட்புப் பணி துரிதமாக மேற்கொள்ளப்படுகிறது. புயல், மழை பாதிப்புக்காக மத்திய அரசிடம் ரூபாய் 5,000 கோடி நிவாரண உதவி கேட்கப்படும்” எனத் தெரிவித்துள்ளார்.

MUST READ