spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுராயபுரத்தில் பொதுமக்கள் சாலை மறியல்.....மின்விநியோகம் சீரடைந்துள்ள பகுதிகள்!

ராயபுரத்தில் பொதுமக்கள் சாலை மறியல்…..மின்விநியோகம் சீரடைந்துள்ள பகுதிகள்!

-

- Advertisement -

 

ராயபுரத்தில் பொதுமக்கள் சாலை மறியல்.....மின்விநியோகம் சீரடைந்துள்ள பகுதிகள்!
Video Crop Image

சென்னை ராயபுரத்தில் மழைநீர் தேங்கியுள்ள நிலையில் பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ராயபுரத்தில் தண்ணீர் தேங்கியுள்ளது, மின்சாரம் தடை, பேருந்து நிறுத்தப்பட்டதைக் கண்டித்து, பொதுமக்கள் மறியலில் ஈடுபட்டனர். அப்போது, ராயபுரம் முகாம்களில் வழங்கப்பட்டுள்ள உணவுகள் சரியில்லை எனக் கூறி, உணவுகளை சாலையில் கொட்டி பொதுமக்கள் தங்கள் எதிர்ப்பைப் பதிவுச் செய்தனர்.

we-r-hiring

மிக்ஜாம் புயல் எதிரொலி….. இரண்டாவது நாளாக இன்றும் திரையரங்குகள் இயங்காது!

போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பொதுமக்களுடன் காவல்துறையினர், அரசு அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்துகின்றனர்.

சென்னையில் ஜெ.ஜெ.நகர், அண்ணா நகர், சேத்துப்பட்டு உள்ளிட்டப் பகுதிகளில் மின்விநியோகம் சீரடைந்தது. அண்ணாசாலை, கிரீம்ஸ் சாலை, நுங்கம்பாக்கம், சிந்தாதிரிப்பேட்டை, ராயப்பேட்டை, கீழ்பாக்கம், மணலி, பெரியார் காலனி, நியூகொளத்தூர் பகுதிகளிலும் மின்விநியோகம் சீரடைந்துள்ளது.

மூன்றாவது முறையாக விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நடிக்கும் நயன்தாரா!

கிண்டி ராமாபுரம், போரூர், அடையாறு, வேளச்சேரி, திருவான்மியூர், தொட்டியம்பாக்கம், பெசன்ட் நகரில் மின் விநியோகம் வழங்கப்பட்டுள்ளது. இதனை மின்சாரத்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

MUST READ