Homeசெய்திகள்தமிழ்நாடுஆட்சியை நடத்த முடியவில்லை என்றால் பதவியை ராஜினாமா செய்துவிட்டு ஓடுங்க ரங்கசாமி- நாராயணசாமி

ஆட்சியை நடத்த முடியவில்லை என்றால் பதவியை ராஜினாமா செய்துவிட்டு ஓடுங்க ரங்கசாமி- நாராயணசாமி

-

ரங்கசாமியின் முதுகில் தமிழிசை குத்தியதாக புதுச்சேரி முன்னாள் முதல்வர் நாராயண சாமி விமர்சனம் செய்துள்ளார்.

புதுச்சேரியின் அரசியல் சூழல் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி, “கிரண்பேடி விஷத்தை வைத்து கொல்வார். ஆனால் தமிழிசை சவுந்தர்ராஜன் சர்க்கரை கொடுத்து கொன்று வருகிறார். எங்களது ஆட்சிக்கு கிரண்பேடி தொல்லை கொடுத்த போது அதை முதலமைச்சர் ரங்கசாமி ரசித்தார். இப்போது அவரது ஆட்சியில் அனுபவித்து வருகிறார். அண்ணன் எனக் கூறி ரங்கசாமியை தமிழில் முதுகில் குத்தி வருகிறார். ஆட்சியை நடத்த முடியவில்லை என்றால் பதவியை ராஜினாமா செய்துவிட்டு, ரங்கசாமி ஓடிவிடலாம். ரங்கசாமி தற்போது தான் வலியை உணர்ந்து புலம்ப ஆரம்பித்துள்ளார்

புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து பெற ரங்கசாமிக்கு திடீர் ஞானம் பிறந்துள்ளது. ஆட்சி பொறுப்பேற்று 2 ஆண்டுகளாகியும் மாநில அந்தஸ்து பெற முடியாமல் ரங்கசாமி புலம்புகிறார். மாநில அந்தஸ்து பெறுவது தொடர்பாக டெல்லிக்கு சென்று பிரதமருக்கு அழுத்தம் தர வேண்டும். மாநில அந்தஸ்து வழங்குவதற்கு ஒத்துவரவில்லை என்றால் கூட்டணியில் இருந்து வெளியேற வேண்டும். கிரண்பேடி ஆளுநராக இருந்தபோது மிகப்பெரிய மன உளைச்சலை தந்தார். துணைநிலை ஆளுநருக்கு எதிராக நாங்கள் போராடும்போது ரங்கசாமி ரசித்து வேடிக்கை பார்த்தார். துணைநிலை ஆளுநருடன் சுமூக உறவு இருந்தால் ரங்கசாமி புலம்புவது ஏன்? ரங்கசாமி தற்போதுதான் வலியை உணர்ந்து புலம்ப ஆரம்பித்துள்ளார்” எனக் கூறினார்.

MUST READ