
தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (மே 30) டோக்கியோவில் உள்ள உலகின் அதிநவீன தகவல் தொழில்நுட்ப மற்றும் மின்னணு நிறுவனமான ‘NEC Future Creation Hub’- க்கு சென்று பார்வையிட்டு, அங்குள்ள நவீன தொழில்நுட்ப வசதிகள் குறித்து கேட்டறிந்தார்.
போக்குவரத்து ஊழியர்களுடன் நாளை முத்தரப்பு பேச்சுவார்த்தை
‘NEC Future Creation Hub’ மையமானது, சிறந்த எதிர்காலத்தை உருவாக்குவதற்கு வசதியாக, ஊடாடும் உரையாடல்கள் (Interactive Dialogues) மற்றும் நேரடி அனுபவங்கள் மூலம் தொழில்நுட்பமும், வணிகமும் ஒன்றிணையும் இடமாகும். சமூகப் பிரச்சனைகளைத் தீர்க்கும், தொழில்நுட்பத்தை உருவாக்குவது முதல், செயற்கை நுண்ணறிவு மற்றும் பயோமெட்ரிக் அங்கீகார தொழில்நுட்பங்களின் வளர்ச்சி வரை புதிய மதிப்பை உருவாக்கி வருகிறது.
‘NEC Future Creation Hub’ மையத்திற்கு சென்று பார்வையிட்ட முதலமைச்சரிடம், விமான நிலையங்களில் மின்னணு சுங்க அறிவிப்பு வாயில் மூலமாக முக அங்கீகார தொழில்நுட்பம், வேகமான சுங்க அனுமதி, நெரிசலற்ற சுங்க ஆய்வு தளங்கள், காத்திருப்பு நேரத்தைக் குறைத்தல் ஆகிய மன அழுத்தம் இல்லாத விமான பயணத்தை மேற்கொள்வதற்கான நடைமுறை வழிமுறைகள் குறித்து மைய உயர் அலுவலர்கள் விளக்கினார்கள். இந்த அதிநவீன விமான பயண முறை உலகின் பரபரப்பான விமான நிலையமான அட்லாண்டா உள்ளிட்ட பல்வேறு நாடுகளின் விமான நிலையங்களிலும் செயல்பட்டு வருகிறது என்று தெரிவித்தனர்.

‘NEC’ நிறுவனம், துறைமுகக் கண்காணிப்பு, தொழிற்சாலை மேலாண்மை, ரயில் போக்குவரத்து மேலாண்மைத் தொடர்பு, சாலை போக்குவரத்து மேலாண்மை, தீயணைப்பு அமைப்புகள், தகவல் தொடர்பு அமைப்புகள், விமான போக்குவரத்து கட்டுப்பாடு, வங்கி ஏ.டி.எம்.கள், டிஜிட்டல் தொலைக்காட்சி பரிமாற்றம், மின்னணு அரசாங்கம், நீர் மேலாண்மை, செயற்கைக்கோள் தகவல் தொடர்பு போன்ற கடல் முதல் விண்வெளி வரை அனைத்து நிர்வாகத்திலும் நவீன தொழில் நுட்பங்களை பயன்படுத்தித் தீர்வு கண்டு வருவதைப் பற்றி தமிழக முதலமைச்சரிடம் விளக்கப்பட்டது.
‘நான் கடவுள்’ பட பாணியில் சடலத்தின் மீது அகோரி பூஜை- மயானத்தில் திகில்!
இந்த மையத்தைப் பார்வையிட்ட நிகழ்வில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மைய உயர் அலுவலர்களுடன், தமிழகத்திற்கான முக அங்கீகார செயற்கை நுண்ணறிவு, குவாண்டம் கம்ப்யூட்டிங் நோக்கம், தமிழக அரசின் நிர்வாகத்திலும், பொது பயன்பாடு வசதிகளிலும், செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தினை பயன்படுத்துவது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.
இந்நிகழ்வின் போது, தமிழக தொழில், முதலீட்டு மற்றும் வர்த்தகத்துறை அமைச்சர் முனைவர் டி.ஆர்.பி.ராஜா, கூடுதல் தலைமைச் செயலாளர் எஸ்.கிருஷ்ணன் இ.ஆ.ப., தமிழக வழிகாட்டி நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் வே.விஷ்ணு இ.ஆ.ப., ‘NEC Future Creation’ மைய உயர் அலுவலர்கள் உடனிருந்தனர்.