Homeசெய்திகள்தமிழ்நாடுநெல்லை, கன்னியாகுமரியில் இன்று கனமழைக்கு வாய்ப்பு!

நெல்லை, கன்னியாகுமரியில் இன்று கனமழைக்கு வாய்ப்பு!

-

 

கேரளாவில் தென்மேற்கு பருவமழை தொடங்கியுள்ளது!
File Photo

நெல்லை, கன்னியாகுமரி மாவட்டங்களில் இன்று (ஜன.01) கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

நாளை திருச்சி வருகிறார் பிரதமர் நரேந்திர மோடி!

இது குறித்து சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “நெல்லை, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் இன்று (ஜன.01) கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. தமிழகத்தில் நாளை (ஜன.02) அதிகாலை வேளைகளில் லேசான பனிமூட்டத்திற்கு வாய்ப்புள்ளது. நீலகிரி மாவட்டத்தின் மலைப்பகுதியில் இன்று (ஜன.01) இரவு நேரங்களில் உறை பனிக்கு வாய்ப்புள்ளது.

கறுப்பு நிறத்திற்கு மாற்றப்பட்ட முதலமைச்சரின் பாதுகாப்பு வாகனங்கள்!

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஜனவரி 07- ஆம் தேதி வரை ஏழு நாட்களுக்கு மிதமான மழை பெய்யக்கூடும். சென்னையில் இரண்டு நாட்களுக்கு அதிகாலை வேளையில் லேசான பனிமூட்டத்திற்கு வாய்ப்பு உள்ளது. குமரிக்கடல், மன்னார் வளைகுடா ஆகிய கடல் பகுதிகளில் மணிக்கு 55 கி.மீ. வேகத்தில் சூறைக்காற்று வீசக்கூடும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

MUST READ