Homeசெய்திகள்தமிழ்நாடுஎடப்பாடி பழனிசாமி மீது புதிய ஊழல் குற்றச்சாட்டு- அரசு அதிரடி உத்தரவு

எடப்பாடி பழனிசாமி மீது புதிய ஊழல் குற்றச்சாட்டு- அரசு அதிரடி உத்தரவு

-

எடப்பாடி பழனிசாமி மீது புதிய ஊழல் குற்றச்சாட்டு- அரசு அதிரடி உத்தரவு

எடப்பாடி பழனிசாமி மீது லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணை நடத்த தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.

சட்டம் ஒழுங்கு ரவுடிகள் வசம் - இபிஎஸ் குற்றச்சாட்டு..

தற்போதைய அதிமுக பொதுச்செயலாளராகவும், கடந்த 2017ல் இருந்து 2021 வரை முதல்வராகவும் இருந்த பழனிசாமி மீது புதிய ஊழல் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அப்போது முதலமைச்சராக இருந்த எடப்பாடி பழனிசாமியிடமே பொதுப்பணித்துறையும் இருந்தது.அவரது ஒப்புதலின்பேரில், கட்டப்பட்ட மருத்துவ கட்டிட பணிகளில்தான் முறைகேடு நடந்திருப்பதாக புகாரில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

அதாவது தேசிய மருத்துவ ஆணையத்தின் விதிமுறைகளை மீறி கட்டிடம் கட்டப்பட்டதாகவும், விதிகளுக்கு மாறாக எடப்பாடி பழனிசாமி வசம் இருந்த பொதுப்பணித்துறை அதிகாரிகள் மற்றும் என்ஜினீயர்கள் கட்டுமான பணிக்கு ஒப்பந்தம் வழங்கியதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதுதொடர்பாக எடப்பாடி பழனிசாமியிடம் விசாரணை நடத்த லஞ்ச ஒழிப்பு போலீசார் தமிழக அரசிடம் அனுமதி கேட்டிருந்தனர். அதற்கு அதனை ஆய்வு செய்த தமிழக அரசு எடப்பாடி பழனிசாமி மீதான ஊழல் குற்றச்சாட்டு தொடர்பாக விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து அவர் மீதான விசாரணையை லஞ்ச ஒழிப்பு போலீசார் விரைவில் தொடங்குவர் என எதிர்பார்க்கப்படுகிறது.

MUST READ